”Black Lives Matter” வாசக சின்னத்தை அணியவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 

114

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ”Black Lives Matter” என்னும் ஆங்கில வாசகம் அடங்கிய சின்னத்தை தங்களது சீருடைகளின் கழுத்துப்பட்டையில் (Collar) அணியவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் தலைமைப் பயிற்சியாளர் சுய தனிமைப்படுத்தளில்

இங்கிலாந்தில் மரணமடைந்த ஒருவரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்…

கடந்த மே மாதம் அமெரிக்காவின் மினோசோட்டா மாநிலத்தில் கறுப்பினத்தை சேர்ந்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட், பொலிசாரினால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நிறவெறியின் அடையாளமாக பார்க்கப்பட்டிருந்தது. 

இந்த கொடூர சம்பவத்தின் பின்னர் உலகளாவிய ரீதியில் கறுப்பினத்தனவர்களின் மீதான நிறவெறிக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களும், பல எதிர்ப்பு கோஷங்களும் எழும்பியிருந்தன. இந்நிலையில், கறுப்பினத்தவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என ”Black Lives Matter” என்னும் ஆங்கில வாசகம் அடங்கிய ஹேஷ்டேக் ஒன்றும் சமூகவலைதளமான டுவிட்டரில் பரவியது. இந்த ஹேஷ்டேக்கிற்கு பலரும் ஆதரவு தந்திருந்ததோடு, விளையாட்டு வீரர்களும் தாங்கள் பங்கேற்கும் போட்டிகளில் இந்த ஹேஷ்டேக்கில் இருக்கும் ஆங்கில வாசகத்தினை தங்களது சீருடைகளில் அணிந்து கறுப்பினத்தவருக்கான தங்களது ஆதரவினை வழங்கினர். 

அந்தவகையில், கால்பந்து விளையாட்டுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் ”Black Lives Matter” என்னும் ஆங்கில வாசகம் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் முதல்முறையாக சின்ன வடிவில் பயன்படுத்தப்படவிருக்கின்றது.   

டோனி வரலாற்று நாயகன், கோஹ்லியை விட சிறந்தவர் இல்லை – புவ்னேஸ்வர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் புவ்னேஸ்வர் குமார்…

இந்த ”Black Lives Matter” என்னும் வாசகம் அடங்கிய சின்னம் அலீஷா ஹோசன்னா என்னும் நிபுணர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இந்த சின்னத்தினை இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் பயன்படுத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது உத்தியோகபூர்வ அனுமதியினை வழங்கியிருக்கின்றது.  

அதேநேரம், அதிகமான கறுப்பினத்தவர்களை கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இந்த சின்னத்தை அணிவதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் நிறவெறிக்கு எதிராக போராடுவதும், இந்த வாசகம் அடங்கிய சின்னம் அணிவதன் மற்றுமொரு நோக்கமாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த சின்னத்தினை அணிவது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், ”இது விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியமான விடயமாகும். அதேபோன்று, கிரிக்கெட் விளையாட்டிற்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இது முக்கியமான விடயமாகும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.  

இன்னும் கருத்து வெளியிட்டிருந்த ஜேசன் ஹோல்டர், கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் அவர்களது நிறம் காரணமாக தாழ்த்தப்படுவது கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் செய்வது, ஊக்கமருந்து பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு சமமாக பார்க்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் இடையிலான (மூன்று போட்டிகள் கொண்ட) டெஸ்ட் தொடர் ஜூலை 08ஆம் திகதி சௌத்தம்ப்படன் ஆரம்பமாகின்றது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க