86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர்

158

இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான அருட்தந்தை மொரிஸ் லே கொக் கிண்ணத்துக்கான 86ஆவது புனிதர்களின் சமர் கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  

‘Battle of the Saints’ எனும் பெயரில் ஜோசப்பியன் பீட்டரைட் கிரிக்கெட் போட்டியாக அழைக்கப்படுகின்ற இம்மாபெரும் கிரக்கெட் சமரானது முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 

இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ………….

இந்த வருடம் புனித ஜோசப் கல்லூரியை, சகலதுறை வீரர் ஜொஹான் டி சில்வாவும், புனித பேதுரு கல்லூரியை விக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஷெனன் பெர்னாண்டோ வழிநடத்தவுள்ளனர். 

இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி அணி 12 இலும், புனித பேதுரு கல்லூரி அணி 10 இலும் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. 

இறுதியாக வினு மொஹொட்டி தலைமையில் 2016 இல் வெற்றிபெற்ற புனித பேதுரு கல்லூரியிடம் இந்த வெற்றிக் கிண்ணம் தற்போது உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ருவந்த பெர்னாண்டோபுள்ளே தலைமையில் புனித ஜோசப் கல்லூரி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணிக்காக விளையாடிய இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் இவ்விரண்டு கல்லூரிகளிலும் கல்வி கற்றுள்ளனர்.  

இதில் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெத்திவ்ஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, ஆஷ்லி டி சில்வா, மைக்கல் வான்டொட், ரோஷேன் சில்வா, பிரியாமல் பெரேரா மற்றும் சதீர சமரவீர ஆகியோர் புனித ஜோசப் கல்லூரியையும்,  ரோய் டயஸ், ருமேஷ் ரத்னாயக்க, ரஸல் ஆர்னல்ட், வினோதன் ஜோன், அமல் சில்வா, கௌஷால் லொக்குஆராச்சி, மலிந்த வர்னபுர, மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் புனித பேதுரு கல்லூரியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

இதனிடையே 1975ஆம் ஆண்டு முதல் இவ்விரண்டு பாடசாலைகளுக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற புனிதர்களின் சமரின் ஒருநாள் போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

46ஆவது தடவையாக நடைபெறவுள்ள இந்த ஒருநாள் போட்டியானது அருட்தந்தை பீடர் ஏ பிள்ளை கிண்ணத்துக்காக நடைபெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இந்த நிலையில், 86ஆவது புனிதர்களின் சமர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் முதல்வரான அருட்தந்தை ரஞ்சித் அந்த்ராடி அடிகளார்,  

இலங்கையின் இரண்டு முன்னணி பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற இம்மாபெரும் கிரிக்கெட் சமரானது, இலங்கையின் விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக திகழ்வதுடன் இது இளைஞர்களையும் முதியவர்களையும் ஈர்க்கின்ற போட்டியாகவும் காணப்படுகின்றது எனவும் இரண்டு அணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை உத்தேச குழாம் அறிவிப்பு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும்……………

அத்துடன், கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ரோஹித ரோட்றிகோ கருத்து தெரிவிக்கையில், 

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரானது சுமார் எட்டு தசாப்தங்களுக்கு மேலாக பராம்பரிய வரலாற்றினையும் தோழமையினையும் கொண்டுள்ளது. 

இதன் மூலம் தேசிய மட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல முன்னணி வீரர்களை உருவாக்கி இலங்கைக்கு மிகுந்த மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது என தெரிவித்தார். 

இதேவேளை, 86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் சமருக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா இவ்வருடமும் அனுசரணை வழங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

Photos: 86th Battle of the Saints | Press Conference

ThePapare.com | Hiran Weerakkody | 12/02/2020 | Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement. Photos are available for purchase contact – [email protected]

இதனிடயே, 86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் சமரை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக நேரடியாக கண்டுகளிக்க முடியும். அத்துடன், டயலொக் TV மற்றும் டயலொக் Viu மூலமும் பார்க்கலாம்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<