மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை உத்தேச குழாம் அறிவிப்பு

60

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I கிரிக்கெட் போட்டிகளுக்கான 20 பேர் கொண்ட உத்தேச அணிக்குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகைத்தந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 2 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகும் போட்டித் தொடரின் முதல் போட்டி 22ம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட்…………

போட்டித் தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 20 பேர்கொண்ட குழாத்தின் படி, ஒருநாள் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்படவுள்ளதுடன், T20I போட்டிகளுக்கான தலைவராக லசித் மாலிங்க செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த 20 பேர்கொண்ட குழாத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் எதனையும் இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளவில்லை. முக்கிய ஒரு மாற்றமாக இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய திசர பெரேரா மீண்டும் இந்த 20 பேர்கொண்ட குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இந்திய அணிக்கு எதிரான T20I குழாத்தில் உபாதை காரணமாக இணைக்கப்படாமல் இருந்த நுவான் பிரதீப் 20 பெர்கொண்ட குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், இந்திய அணிக்கு எதிரான தொடரில் உபாதைக்குள்ளாகிய இசுரு உதான மீண்டும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த போதும், அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20I தொடர்களிலிருந்து நீக்கப்பட்ட செஹான் ஜயசூரிய மீண்டும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக மற்றும்  குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்களும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்

திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, அவிஷ் பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் டிக்வெல்ல, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ஷ, ஓசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், லஹிரு குமார, லசித் மாலிங்க, கசுன் ராஜித, செஹான் ஜயசூரிய, நுவான் பிரதீப், இசுரு உதான

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<