அரையிறுதிக்குள் புனித ஹென்றிக் கல்லூரி

438

வயதிற்குட்பட்ட கொத்மலை கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை இளவாலை புனித ஹென்றிக் கல்லூரி பெற்றுள்ளது. 12ம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கண்டி தர்மராஜ கல்லூரிக்கு எதிரான காலிருதிப்போட்டியில் 4-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றதை அடுத்தே இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

போட்டி ஆரம்பமாகி முதல் 5 நிமிடங்களுக்குள் புனித ஹென்றிக் கல்லூரியின் முத்துலிங்கம் கிளசன் இலகுவாக முதல் கோலை போட்டார். அதன் பின் போட்டி விறுவிறுப்பாக சென்றது. முதல் இடைவேளைக்கு 5 நிமிடங்கள் இருக்கும் போது தர்மராஜ கல்லூரியின் வீரர் கிஹான் தேசப்பிரிய தனது  அணிக்காக முதல் கோலை  போட்டார். போட்டியின் முதல் இடைவேளைக்கு செல்லும் 1-1 என்று போட்டி சமநிலையில் காணப்பட்டது.

 அனைத்து கொத்மலை Chox காலிறுதிப் போட்டியில் விவரங்கள் இங்கே கிளிக் செய்யவும் 

அதன் பின் 2வது பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களில் புனித ஹென்றிக் கல்லூரியின் ஞானேஸ்வரன் அந்தோணி ராஜ் தனது அணிக்காக 2வது கோலை அடித்தார். அதன் பின் போட்டியின் 73வது நிமிடத்தில் ஜோன் பேட்ரிக்கும் போட்டி முடிய ஒரு சில நிமிடங்களுக்கு முன் ஞானேஸ்வரன் அந்தோணி ராஜ் இன்னொரு கோலை போட்டதன் மூலம் 4க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது புனித ஹென்றிக் கல்லூரி.

இந்த காலிறுதிப்போட்டியில் ThePapare.com ஆட்டநாயகனாக 2 கோல்களை போட்ட ஞானேஸ்வரன் அந்தோணி ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்த பின் புனித ஹென்றிக் கல்லூரியின் பயிற்றுனர் எம்.டி விஜயகுமார் கூறுகையில் ” இங்கு யாழ்ப்பாணத்தை போன்று கடினமான மைதானமில்லை, மிருதுவானது. எமது வீரர்கள் சூழ்நிலையை அறிந்து கொள்ள கொஞ்ச நேரம் சென்றது அதனால் தான் முதல் பாதியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அரையிறுதிபோட்டிக்கும் மேலும் சிறப்பாக தயாராக வேண்டும்”  எனக் கூறியிருந்தார்

அத்தோடு கண்டி தர்மராஜ கல்லூரியின் பயிற்றுனர் தரிந்து லியனகே கூறுகையில் ” நாம் முதல் பாதியில் சிறப்பாக விளையாடினோம், எமது கோல் காப்பாளர் சில பிழைகளை விட்டார். அதுவே எமது தோல்விக்கு காரணமாயிற்று, அதுமட்டுமின்றி புனித ஹென்றிக் கல்லூரிக்கு எதிராக 2வது பாதியில் நமது வீரர்கள் உடற்தகுதியில்  குறைவாக இருந்தார்கள்” எனவும் கூறியிருந்தார்.

இளவாலை புனித ஹென்றிக் கல்லூரியோடு  19 வயதிற்குட்பட்ட  கொத்மலை கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் வாய்பை கொழும்பு சாஹிராக் கல்லூரியும் புனித செபஸ்டியன் கல்லூரி அணியும் பெற்றுள்ளன.

கொழும்பு சாஹிராக் கல்லூரி மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை தோற்கடித்ததன் மூலமும் புனித செபஸ்டியன் கல்லூரி அணி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியை தோற்கடித்ததன் மூலமுமே அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.