இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

91

கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட்.  

பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன.

தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்!

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ……….

இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில் ஒரு சவால் மிக்க கிரிக்கெட் அணியாக உருவாக இலங்கையர்கள் இருவரின் முக்கிய பங்களிப்பு காரணமாக இருந்தது. அந்த இலங்கையர்கள் யார்? அவர்கள் பற்றி ஒரு முறை நோக்குவோம்.   

மாற்றத்தை ஆரம்பித்த சந்திக ஹதுருசிங்க 

சந்திக ஹதுருசிங்க இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு பரீட்சயமான ஒரு பெயர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கூட. கடந்த 2014ஆம் ஆண்டு நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் பங்களாதேஷ் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹதுருசிங்க மாறினார்.  

ஹதுருசிங்க தலைமைப் பயிற்சியாளர் பதவியினை ஏற்றதன் பின்னர் தோல்விகளையே தொடர்ந்து பார்த்து பழக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், வேறுவிதமான அணியாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தனர். 

அந்தவகையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பொற்காலம் ஹதுருசிங்கவின் வருகையோடு ஆரம்பித்தது. ஹதுருசிங்கவின் ஆளுகைக்குள் வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் ஒருநாள் தொடர்களில் முதல் தடவையாக இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை வீழ்த்தினர். 

அதேநேரம், கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் ஹதுருசிங்கவின் ஆளுகையில் சிறந்த அணியாக உருவெடுத்தனர். இலங்கையினை சேர்ந்த ஏனைய சிறந்த கிரிக்கெட் வீரர்களான ஷம்பக்க ராமநாயக்க, திலான் சமரவீர ஆகியோரையும் பங்களாதேஷின் பயிற்சியாளர் குழாத்திற்குள் இணைத்த ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக தோற்கடிக்க அவ்வணியை வழிநடாத்தியிருந்தார். 

இது மட்டுமின்றி, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணம் போன்ற கிரிக்கெட் தொடர்களிலும் நேரடித் தகுதியினைப் பெற சந்திக ஹதுருசிங்க முக்கிய பங்கு வகித்திருந்தார். 

தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சந்திக ஹதுருசிங்க, தான் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை பயிற்றுவித்த காலத்தில் பங்களாதேஷின் கிரிக்கெட் இரசிகர்கள் அவரை வாழ்த்தியதை ஒருமுறை நினைவுகூர்ந்திருந்தார். ஹதுருசிங்க அதில், பங்களாதேஷ் இரசிகர் ஒருவர் தன்னுடன் பேசிய சந்தர்ப்பத்தில் தங்களது புன்னகைக்கு காரணம் சந்திக ஹதுருசிங்க ஆகிய நீங்களே எனக் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார்.   

இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (11) இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் எட். ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ………..

இவ்வாறு ஒரு கட்டத்தில் கத்துக் குட்டிகளாக இருந்த பங்களாதேஷின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியினை, சந்திக ஹதுருசிங்க தான் கிரிக்கெட் அரங்கில் ஏனைய அணிகள் போன்று ஒரு சவால் மிக்க அணியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார். அதோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு இதுவரையில் கிடைத்த தலைசிறந்த பயிற்சியாளராகவும் ஹதுருசிங்கவே இருக்கின்றார் எனக் கூறினாலும் அது மிகையாகாது. 

நவீட் நவாஸ்

நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை நவீட் நவாஸினை ஓரிரு பேருக்கு மாத்திரமே தெரியும். ஏனெனில், இடதுகை துடுப்பாட்ட வீரரான நவீட் நவாஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக வெறும் 4 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்றார். 

இலங்கை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியிருக்காத போதிலும், ஒரு பயிற்சியாளராக மிகப் பெரிய அனுபவத்தினை நவீட் நவாஸ் கொண்டிருக்கின்றார். இந்த அனுபவமே அவருக்கு ஒரு அணி உலகக் கிண்ணம் வெல்ல வழிகாட்டியாக இருக்க உதவியிருக்கின்றது. 

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த நவீட் நவாஸ் 2018ஆம் ஆண்டின் ஜூலை மாதம் பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். 

நவீட் நவாஸ் நியமனம் செய்யப்பட முன்னர் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினர் 2018ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் 6ஆவது இடத்தினை பெற்றிருந்தனர். எனவே, ஒரு சிறந்த அணியினை கட்டமைக்க வேண்டிய தேவையும், சவாலும் அப்போது நவாஸிற்கு இருந்தது.  

பின்னர், நவீட் நவாஸின் ஆளுகைக்குள் முழுமையாக வந்த பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியினர் முதலில் விளையாடிய கிரிக்கெட் தொடராக 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணம் அமைந்தது. 

குறித்த தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத போதிலும் பங்களாதேஷ் பாகிஸ்தானை தோற்கடித்தது. தொடர்ந்து, இலங்கை அணியுடன் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரினையும் பங்களாதேஷ் 1-1 என சமநிலை செய்திருந்தது. 

இதன் பின்னர், கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஒருநாள், இளையோர் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தினை இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் இளம் அணி, அதன் பின்னர் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போதிலும் அதில் இந்தியாவிடம் தோல்வியினை தழுவியது. 

விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட பெரேரா, மாலிங்க

பிரபல கிரிக்கெட் விளையாட்டு இணையத்தளமான ………

எனினும், குறித்த தோல்விக்குப் பின்னர் 2020ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தினை இலக்காக வைத்த பங்களாதேஷ் வீரர்கள், தொடர் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு முன்னரே சென்றிருந்தனர். 

பின்னர், அங்கே நவீட் நவாஸின் தலைமையில் பயிற்சிகளை மேற்கொண்ட பங்களாதேஷ் இளம் அணியினர் அந்நாட்டின் நிலைமைகளுக்கு இசைவாகியிருந்தனர். 

அதேநேரம், பங்களாதேஷின் இளம் வீரர்கள் அவர்களது நாட்டில் இடம்பெறும் முதல்தரப் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

இப்படியாக நவீட் நவாஸின் ஆளுகையில் பல உத்திகளை கையாண்டதே பங்களாதேஷின் இளம் அணியினர், இளம் வீரர்களுக்கான உலகக் கிண்ணத்தில் வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது.  

அதோடு, நவீட் நவாஸ் பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணியினர் தௌஹீத் ரித்தோய், அக்பர் அலி, பர்வேஸ் ஹொசைன் ஈமோன் மற்றும் தன்ஸித் ஹஸன் போன்ற எதிர்கால நட்சத்திரங்களை இனங்காணவும் உதவியிருக்கின்றார். 

இவ்வாறாக, பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணி வளர அதற்கு  பல்வேறு வகைகளிலும் உதவிய நவீட் நவாஸ் பங்களாதேஷின் கிரிக்கெட்டிற்கு கிடைத்த பெரும் சொத்து என்பதில் சந்தேகமில்லை.  

எவ்வாறிருப்பினும் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இலங்கையரின் பங்கு மிகப் பெரிய சாதகமாக இருந்தது என்பதில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஓரளவு திருப்தி காண்கின்றனர். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<