அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஜிம்பாப்வே

82

அவுஸ்திரேஎலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து ஜிம்பாப்வே அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை வென்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (03) டவுன்ஸ்வில்லேயில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ஒற்றை இலக்க ஓட்டங்களோடு பெவிலியன் திரும்பினர்

ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய டேவிட் வோர்னர் அரைச் சதம் கடந்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வோர்னர் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் 31 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரியான் பர்ல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கைடானோ 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வெஸ்லி மதவெரே, சீன் வில்லியம்ஸ், சிகெந்தர் ராசா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்..

பின்னர் ஜோடி சேர்ந்த மருமணி – ரேஜிஸ் சகாப்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். பின் 35 ஓ;ட்டங்களோடு மருமணி விக்கெட்டை பறிகொடுக்க, மறுமுனையிலிருந்த அணித் தலைவர் சகாப்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 39 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

1992இல் முதல்முறையாக அவுஸ்திரேலியாவில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதல் ஒருநாள் வெற்றியை பதிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், இதற்கு முன் 1983 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணின்கெதிராக 2 வெற்றிகளை ஜிம்பாப்வே அணி பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜிம்பாப்வே அணி அண்மையில் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் மற்றும் T20 தொடரை சொந்த மண்ணில் வைத்து வென்று சாதனை இருந்தமை குறிப்பிடத்தக்கது,

இதேவேளை, இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தாலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<