ஆஷஷ், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு

ICC Test Championship 2022-23

153

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஷ் தொடர்களுக்கான 17 பேர்கொண்ட அவுஸ்திரேலியா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் மார்கஸ் ஹரிஸ், மிச்சல் மார்ஷ் மற்றும் ஜொஷ் இங்லிஸ் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

3ஆவது முறையாக விஸ்டன் விருதை வென்றார் பென் ஸ்டோக்ஸ்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் செபீல்ட் சீல்ட் உள்ளூர் போட்டித்தொடரில் மார்கஸ் ஹரிஸ் 2 சதங்கள் அடங்கலாக 601 ஓட்டங்களை பதிவுசெய்திருந்த நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தொடரில் அதிகூடிய ஓட்டங்களை கெமரூன் பென்கிரொப்ட் (945 ஓட்டங்கள்) பெற்றிருந்த போதும், இடதுகை துடுப்பாட்ட வீரர்களின் தேவை காரணமாக ஹரிஸ் அணியில் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேநேரம், இறுதியாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த மிச்சல் மார்ஷ், டெஸ்ட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக கெமரூன் கிரீன் விளையாடி வரும்போதும் மேலதிக சகலதுறை வீரராக இணைக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக இவர்கள் இருவரும் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்கொட் போலண்ட், மிச்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹெஷல்வூட் மற்றும் அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் காப்பாளராக அலெக்ஸ் கெரி பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலதிக விக்கெட் காப்பாளராக ஜொஷ் இங்லிஸ் இடம்பெற்றுள்ளார். சுழல் பந்துவீச்சை பொருத்தவரை அனுபவ வீரர் நெதன் லயனுடன், இந்திய தொடரில் சிறப்பாக பந்துவீசியிய டொர்ட் மேர்பே இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 வருடங்களில் சதீர என்ன செய்தார்?

அவுஸ்திரேலிய அணியின் பலமான துடுப்பாட்ட வரிசைக்கு உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேங், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் போன்ற முன்னணி வீரர்கள் வலுவளிக்கவுள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக ஜூன் 7ஆம் திகதி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடவுள்ளதுடன், குறித்த போட்டிக்கான குழாம் 15 வீரர்கள் கொண்டதாக மாற்றப்படும் என்பதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடர் ஜூன் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய குழாம்

பெட் கம்மின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கெரி, கெமரூன் கிரீன், மார்கஸ் ஹரிஸ், ஜொஷ் ஹெஷல்வூட், டிராவிஷ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேங், நெதன் லயன், மிச்சல் மார்ஷ், டொட் மேர்பே, மெதிவ் ரென்சோவ், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், டேவிட் வோர்னர்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<