ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி

276

அரையிறுதியில் ஜப்பான்

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான அணிக்கு 7 பேர் கொண்ட றக்பி போட்டியின் அரை இறுதிச் சுற்றில் விளையாட ஜப்பான் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே பலம் பொருந்திய நியூசிலாந்து அணியை ஜப்பான்  அணி 12-14 என்ற ரீதியில் தோற்கடித்து  நியூசிலாந்து அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை ஜப்பான் எதிர்கொண்டு விளையாடியது. ஆரம்பம் முதல் இரு அணிகளும் சிறப்பாக ஆடினாலும் ஜப்பானின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டது. இறுதியில் ஜப்பான் அணி இந்தப் போட்டியில் 12-07 என்ற அடிப்படையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த  வெற்றியின் மூலம் ஜப்பான் அணி அரை இறுதிப் போட்டியில் பிஜி அணியை சந்திக்கிறது. மற்றைய அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க பலபரிட்ச்சை நடாத்தவுள்ளன.

அடுத்த சுற்றுக்கு தெரிவானது பிரேசில்

2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் பெருமைக்கு பெயர் போன பிரேசில் கால்பந்தாட்ட அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. டென்மார்க் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டி நேற்று  புதன் கிழமை நடைபெற்றது. முதல் 2 குழுப் போட்டிகளையும் சமநிலையில் முடித்த பிரேசில் அணி இந்தப் போட்டியில் 4-0 என்ற அடிப்படையில் டென்மார்க் அணியை வெற்றி கொண்டது. பிரேசில் அணி  சார்பாக கெபிகோல் 2 கோல்களைப் போட கேப்ரியல் ஜீசஸ் மற்றும் லியுன் ஆகியோர் தலா 1 கோல் வீதம் போட்டனர். இந்த வெற்றியின் மூலம்  குழுஇல் முதல் நிலையைப்பெற்ற (5 புள்ளிகள்)  பிரேசில் அணி அடுத்த சுற்றில் கொலம்பியா அணியை எதிர்வரும் சனிக்கிழமை ஸா பாலோவில் சந்திக்கிறது. குழுஏ” இல் 2ஆம் நிலையைப் பெற்ற டென்மார்க் அணி (4 புள்ளிகள்) அடுத்த சுற்றில் நைஜீரியா அணியை சந்திக்கவுள்ளது.

இதேவேளை தென் ஆபிரிக்க மற்றும் ஈராக் அணிகள் இந்தத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

டிங் நினிற்கு தங்கப் பதக்கம்

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஒற்றையருக்கான மேசைப்பந்துப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த டிங் நிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் எக்ஸ்எசியாவை 4-3 என்ற அடிப்படையில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

இதேவேளை ஒலிம்பிக் நீச்சலில் பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ 2 நிமிடம் 06.58 வினாடிகளில் இலக்கைக் கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த ஒலிம்பிக்கில் அவரது கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரிப்பது இது 3ஆவது முறையாகும். ஏற்கனவே 400 மீட்டர் தனிநபர் மெட்லே மற்றும் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவுகளிலும் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார்.

“இரும்பு பெண்மணிஎன்று செல்லமாக அழைக்கப்படும் 27 வயதான கதின்கா, வெற்றிக்கு தனது கணவரும், பயிற்சியாளருமான ஷேன் துசுப்பின் ஊக்கமும் முக்கியம் காரணம் என்கிறார். “ஒரு பயிற்சியாளராக அவர் மிகவும் கண்டிப்பானவர். மிகவும் உணர்ச்சி வசப்படுவார். ஆனால் வீட்டில் பழகுவதற்கு இனிமையானவர். ஜாலியாக இருப்பார்என்றார்.

மேலும் அவர் கூறும் போது, “இங்கு வருவதற்கு முன்பாக மூன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் வெல்லவில்லை. அதனால் ரியோவில் ஏதாவது பதக்கம் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் வந்தேன். ஆனால் மூன்று தங்கப்பதக்கம் வென்றதை உண்மையிலேயே நம்ப முடியவில்லைஎன்றும் குறிப்பிட்டார்.

கதின்கா இன்னும் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் நீச்சலடிக்க இருக்கிறார். இதிலும் தங்கப்பதக்கத்தை வென்றால், ஒரு ஒலிம்பிக்கில் நீச்சலில் பெண்கள் தனிநபர் பிரிவில் அதிக தங்கப்பதக்கத்தை வென்ற கிழக்கு ஜெர்மனி வீராங்கனை கிரிஸ்டின் ஒட்டோவின் (1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்) சாதனையை சமன் செய்வார்.