இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்துவின் பெயரில் பிரத்யேக இருக்கை வளாகம் ஒன்று பிரபலமான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது.
சமரி அதபத்து அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான பிக் பேஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.
பாகிஸ்தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் பாபர் அசாம்
இதில் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, சமரி அதபத்துவை கௌரவப்படுத்தும் நோக்கத்தில் சிட்னி மைதானத்தில் “சமரி பே” என்ற பெயரில் பிரேத்யேக இருக்கை வளாகம் ஒன்றை அமைப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கிரிக்கெட்டில் பல்வகை கலாச்சாரங்களை உட்செலுத்துவதற்கும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கும் முகமாக சிட்னி தண்டர்ஸ் அணி நிர்வாகம் இந்த ஏற்பாடை செய்துள்ளது. அதேநேரம் சிட் தண்டர்ஸ் அணியின் கிரிக்கெட் கலாச்சாரத்தை மெழுகேற்றும் முகமாகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி தண்டர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சமரி அதபத்து இதுவரையில் 9 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 41.55 என்ற சராசரியில் 374 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதுவரையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எந்தவகை போட்டிகளிலும் விளையாடாத சமரி அதபத்து தன்னுடைய கன்னி போட்டிக்காக சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<