Home Tamil இரண்டாவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து

இரண்டாவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து

121

2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி புதிய T20 உலகக் கிண்ண சம்பியன்களாக நாமம் சூடியிருக்கின்றது.

அத்துடன் இந்த வெற்றியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் T20 உலகக் கிண்ண சம்பியன்களாக மீண்டும் நாமம் சூடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

>> ஐ.சி.சி. இன் இளையோர் உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில்

முன்னதாக மெல்பர்ன் நகரில் ஆரம்பமான T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தான் அணிக்கு வழங்கினார்.

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியும், இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. மெதுவான ஆரம்பத்தை பெற்ற அவ்வணிக்கு அணியின் நம்பிக்கை வீரர்களில் ஒருவரான மொஹமட் ரிஸ்வான் 15 ஓட்டங்களுடன் சேம் கர்ரனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.

அதேநேரம் புதிதாக வந்த துடுப்பாட்டவீரரான மொஹமட் ஹரிஸ் 8 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். இதன் பின்னர் அணித்தலைவர் பாபர் அசாமின் விக்கெட்டும் அவர் 32 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிபோனது. அவரின் பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம் காட்டிய போதும் ஷான்

மசூத்தின் பெறுமதி மிக்க துடுப்பாட்ட இன்னிங்ஸோடு பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஷான் மசூத் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் சேம் கர்ரன் 3 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 138 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்கள் காரணமாக சிறிது தடுமாற்றம் காட்டிய போதும் பென் ஸ்டோக்ஸின் அபார இன்னிங்ஸோடு போட்டியின் வெற்றி இலக்கை 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களுடன் அடைந்தது.

>> இந்தியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த பென் ஸ்டோக்ஸ் T20I போட்டிகளில் தனது கன்னி அரைச்தத்துடன் 49 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் 17 பந்துகளுக்கு 26 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்திருக்க, மொயின் அலியும் 12 பந்துகளில் 3 பௌண்டரிகள் உடன் 19 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சு சார்பில் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுக்களையும், சதாப் கான், மொஹமட் வஸீம் மற்றும் சஹீன் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் ஆட்டநாயகனாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் சேம் கர்ரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 137/8 (20) ஷான் மசூத் 38(28), பாபர் அசாம் 32(28), சேம் கர்ரன் 12/3(4), ஆதில் ரஷீட் 22/2(4), கிறிஸ் ஜோர்டன் 27/2(4)

இங்கிலாந்து – 138/5 (19) பென் ஸ்டோக்ஸ் 52(49)*, ஹரிஸ் ரவூப் 23/2(4)

முடிவு – இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Pakistan
137/8 (20)

England
138/5 (19)

Batsmen R B 4s 6s SR
Mohammad Rizwan b Sam Curran 15 14 0 1 107.14
Babar Azam c & b Adil Rashid 32 28 2 0 114.29
Mohammad Haris c Ben Stokes b Adil Rashid 8 12 1 0 66.67
Shan Masood c Liam Livingstone b Sam Curran 38 28 2 1 135.71
Iftikhar Ahmed c Jos Buttler b Ben Stokes 0 6 0 0 0.00
Shadab Khan c Chris Woakes b Chris Jordan 20 14 2 0 142.86
Mohammad Nawaz c Liam Livingstone b Sam Curran 5 7 0 0 71.43
Mohammad Wasim Jnr c Liam Livingstone b Chris Jordan 4 8 0 0 50.00
Shaheen Shah Afridi not out 5 3 1 0 166.67
Haris Rauf not out 1 1 0 0 100.00


Extras 9 (b 1 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 137/8 (20 Overs, RR: 6.85)
Bowling O M R W Econ
Ben Stokes 4 0 32 1 8.00
Chris Woakes 3 0 26 0 8.67
Sam Curran 4 0 12 3 3.00
Adil Rashid 4 1 22 2 5.50
Chris Jordan 4 0 27 2 6.75
Liam Livingstone 1 0 16 0 16.00


Batsmen R B 4s 6s SR
Jos Buttler c Mohammad Rizwan b Haris Rauf 26 17 3 1 152.94
Alex Hales b Shaheen Shah Afridi 1 2 0 0 50.00
Phil Salt c Iftikhar Ahmed b Haris Rauf 10 9 2 0 111.11
Ben Stokes not out 52 49 5 1 106.12
Harry Brook c Shaheen Shah Afridi b Shadab Khan 20 23 1 0 86.96
Moeen Ali b Mohammad Wasim Jnr 19 12 3 0 158.33
Liam Livingstone not out 1 2 0 0 50.00


Extras 9 (b 0 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 138/5 (19 Overs, RR: 7.26)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 2.1 0 13 1 6.19
Naseem Shah 4 0 30 0 7.50
Haris Rauf 4 0 23 2 5.75
Shadab Khan 4 0 20 1 5.00
Mohammad Wasim Jnr 4 0 38 1 9.50
Iftikhar Ahmed 0.5 0 13 0 26.00