செல்சி, பர்ன்லி அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு

177
Chelsea extend lead but champions Leicester lose again Tamil

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகள்

நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செல்சி அணி, 12ஆவது இடத்திலிருக்கும் பர்ன்லி அணியுடனான போட்டி 1-1 கோல் அடிப்படையில் சமநிலையுற்று 10 புள்ளிகளை பெற்று கொண்டு தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

அதே நேரம், 2015/16ஆம் ஆண்டுக்கான இங்கிலீஷ் பிரிமியர் லீக் சம்பியன் அணியான லெய்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் ஸ்வான்சீ சிட்டி அணியுடன் அதிர்ச்சி தோல்வியுற்றது. அத்துடன், தொடர்ந்து மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதால் சம்பியன் பட்டதை பறிக்கொடுக்கக்கூடிய நெருக்கடியான நிலையில் காணப்படுகிறது.

பர்ன்லி மற்றும் செல்சி அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில், முதல் பாதி நேரத்தின் ஏழாவது நிமிடத்தின் போது, விக்டர் மோசஸ் உட்செலுத்திய பந்தை முன்கள வீரர் பெட்ரோ கோலாக மாற்றியதன் மூலம் செல்சி அணி முன்னிலை பெற்றது. எனினும், தொடர்ந்து போராடிய பர்ன்லி அணி சார்பாக, அறிமுக வீரராக அன்றைய தினம் களமிறங்கியிருந்த ரோபி பிராடி போட்டியின் கிடைக்கபெற்ற இலவச உதையொன்றை அபாரமாக கோலாக மாற்றி சமநிலைப்படுத்தியிருந்தார்.

ஸ்பானிஷ் பிரிமியர் லீக் போட்டிகள்

ஸ்பானிஷ் பிரிமியர் லீக் போட்டிகளுக்காக நேற்றைய தினம் நடைபெற்ற அத்லெட்டிகோ மெட்ரிட் மற்றும் செல்டா வீகொ அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் அத்லெட்டிகோ மேட்ரிட் 3-2 கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

போட்டி ஆரம்பத்தின் போது அத்லெட்டிகோ மெட்ரிட் அணி முதல் கோலினை அடித்து முன்னிலை பெற்றிருந்தாலும் அதுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்று வெற்றியடையும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டது செல்டா வீகொ அணி. எனினும், போட்டி முடிவுற சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் மூன்று நிமிடங்களுக்குள் தொடர்ச்சியாக கோல்களை அடித்து அத்லெட்டிகோ மெட்ரிட் வெற்றியீட்டியது.

பிரான்ஸ், லீக் 1 போட்டிகள்

பிரான்ஸ், லீக் 1 போட்டிகளுக்காக, OGC நைஸ் மற்றும் ஸ்டேட் ரென்னிஸ் கால்பந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டி 2-2 கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. ரென்னிஸ் கால்பந்து கழகம் இரண்டு கோல்களை பெற்று முன்னிலை வகித்த நிலையில், 59வது நிமிடம் மாற்று வீரர் அனேஷ்டசியோஸ் கோல் ஒன்றினையும், தொடர்ந்து, இறுதி 81ஆவது நிமிடத்தில் வாலண்டைன் எஸ்செரிக் கோல் அடித்து தோல்வியிலிருந்து அணியை மீட்டனர்.

ரென்னிஸ் கால்பந்து கழக முன்கள வீரர் மோர்கன் அமல்பிட்டனோ 7ஆவது நிமிடத்திலும், அவரை தொடர்ந்து கியோவானி சியோ 14ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து தர வரிசையில் முன்னின்ற OGC நைஸ் அணியை வெற்றி கொள்ளும் நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரிஸ் A-லீக்-போட்டிகள்

சிரிஸ் A போட்டிகளுக்காக நேற்றைய தினம் இடம்பெற்ற க்யாக்லியாரீ மற்றும்  ஜுவண்டஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஜுவண்டஸ் அணி 2-0 கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் கோன்சலா ஹிகுயேன் முதல் பாதியில் 37ஆவது நிமிடத்திலும் இரண்டாம் பாதி நேரத்தில் 51ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தார். அந்த வகையில் மேலும் 7 புள்ளிகளை பெற்று 60 புள்ளிகளுடன் தரவரிசையில், 53 புள்ளிகளுடன் முதல் இடத்திலிருக்கும் ரோமா அணியை பின்தள்ளி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

ஜெர்மன் பெடரல் லீக் போட்டிகள்

ஹோபன்ஹிம் மற்றும் வூல்ப்ஸ்பேர்க் அணிகளுக்கிடயிலான போட்டியில், தொடர்ச்சியாக கடந்த போட்டிகளில் தோல்வியுற்று வந்த வூல்ப்ஸ்பேர்க் அணி 2-1 கோல் கணக்கில் வெற்றியீட்டி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

முதல் பாதி நேரத்தில் ஹோபன்ஹிம்  அணி சார்பாக 27வது நிமிடத்தில், ஸ்டீவன் ஜுபர் முதல் கோலை அடித்து முன்னிலைப்படுத்தினார். எனினும், தொடர் தோல்விகளுடன் போராடிய வூல்ப்ஸ்பேர்க் அணி இரண்டாம் பாதி நேரத்தில், 49வது நிமிடம் மக்ஸ்சி ஆர்னல்ட் ஒரு கோலையும், அதனை தொடர்ந்து போட்டியின் இறுதிக்கட்டத்தில் போட்டியின் 73ஆவது நிமிடம், டேனியல் டிடேவியும் கோல் அடித்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.