கொவிட்-19 அச்சத்தினால் இன்றைய போட்டியினை இழக்கும் ரிக்கி பொண்டிங்

111

டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரிக்கி பொண்டிங், இன்று (22) இடம்பெறவிருக்கும் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இடையிலான IPL தொடரின் 34ஆவது லீக் போட்டியில் தனது அணியுடன் பயணிக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பங்களாதேஷ் தொடரிலிருந்து வெளியேறும் பெதும் நிஸ்ஸங்க

ரிக்கி பொண்டிங்கின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானதே அவர் இன்றைய போட்டியில் பிரசன்னமாகாதமைக்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் டெல்லி கெபிடல்ஸ் அணி வீரர்கள் அடங்கலாக அணி உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, அதில் பொண்டிங்கிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என இந்திய செய்திச்சேவையான The Indian Express கூறியுள்ளது.

எனினும் முற்காப்பு நடவடிக்கையாக ரிக்கி பொண்டிங் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு, அவர் இன்றைய போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியுடனும் பயணிக்கவில்லை.

CSK அணியுடன் இணையும் இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்!

இதேவேளை ஏற்கனவே டெல்லி கெபிடல்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களான மிச்செல் மார்ஷ் மற்றும் டிம் செய்பார்ட் ஆகியோர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<