CSK அணியுடன் இணையும் இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்!

1295
Matheesha Pathirana to replace Adam Milne

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடிவரும் சென்னை சுபர் கிங்ஸ் அணியில், இலங்கையின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண இணைக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மாலிங்க பாணியில் பந்துவீசக்கூடிய மதீஷ பதிரண இறுதியாக நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் விளையாடியிருந்த நிலையில், தற்போது IPL தொடரில் சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

>> லக்னோவ் அணியின் தலைவர் கே.எல். ராஹூலுக்கு அபராதம்

சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் அடம் மில்ன் உபாதைக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், மதீஷ பதிரண அவரின் இடத்துக்காக அழைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மதீஷ பதிரண என்.சி.சி. கழகத்துக்காக ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ளதுடன், 2 T20 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தநிலையில், லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பதிரணவை தங்களுடைய அணியில் இணைப்பதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இளம் வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பதிரண, IPL போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளதுடன், இவர் சென்னை அணியுடன் இணைந்துக்கொள்வார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்னை சுபர் கிங்ஸ் அணியை பொருத்தவரை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஏற்கனவே விளையாடி வருகின்றார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது இம்முறை IPL தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<