விராட் கோஹ்லியின் இணையத்தளத்தை ஊடுருவிய பங்களாதேஷ் ரசிகர்கள்

694
Espncricinfo

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அணி தோல்வியுற்ற அதிருப்தியில், பங்களாதேஷைச் சேர்ந்த இனந்தெரியாத நபர்கள் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவியுள்ளதாக சர்வதேச இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ள இந்திய அணி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இம்மாதம் 4ஆம் ..

பங்களாதேஷைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு (Cyber Security & Intelligence) என்ற ஊடுருவல் பிரிவு ஒன்றே விராட் கோஹ்லியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை தோல்வியடையச் செய்து இந்திய அணி சம்பியன் கிண்ணத்தை ஏழாவது தடவையாக வென்றிருந்தது. இந்தப் போட்டியில் மூன்றாவது நடுவர் பங்களாதேஷ் அணிக்கு வழங்கிய ஆட்டமிழப்பொன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாகவே அணி தோல்வியுற்றதாக பங்களாதேஷ் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லிடன் டாஸ், இறுதிப் போட்டியில் சதமடித்து அணிக்கு வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்த நிலையில், விக்கெட் காப்பாளர் டோனியுடைய ஸ்டம்பிங் மூலமாக ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பானது மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்ததால், முடிவு துடுப்பாட்ட வீரருக்கு சார்பாக இருக்க வேண்டும் என பங்களாதேஷ் ரசிகர்கள் கூறிவந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில், குறித்த ஆட்டமிழப்புக்கு எதிராக செயற்படும் வகையில், பங்களாதேஷில் உள்ள இணையத்தளங்களை ஊடுருவும் நபர்கள் அடங்கிய குழுவொன்று, இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவி, அதில் லிடன் டாஸிற்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு புகைப்படத்தினை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு வருடங்களின் பின்னர் டெஸ்ட் குழாத்தில் இணையும் ஹபீஸ்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் …

குறித்த புகைப்படத்தை காட்சிப்படுத்திய குறித்த சைபர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர், ஐசிசிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அவர்கள் காட்சிப்படுத்தியுள்ள பதிவில்,

கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டாக பயன்படுத்தப்படவில்லை. அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் வழங்கப்படுகிறதா? லிடன் டாஸிற்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு தொடர்பில் ஐசிசி விளக்கமளிக்க வேண்டும்.ஐசிசி குறித்த ஆட்டமிப்புக்காக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டாம். தவறான தீர்ப்பு வழங்கிய நடுவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம். ஆனால், இவ்வாறான விடயங்கள் நடைபெறுமாயின், ஒவ்வொரு தடவையும் உங்களுடைய இணையத்தளங்களை மீள் திருத்திக்கொள்ள தயாராக இருங்கள்என பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் குறித்த பதிவில்,

இந்திய சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களை அவமதிப்பதற்காக இந்த பதிவை இடவில்லை. நீங்களும் சிந்திக்கவும், உங்களது அணிக்கு இவ்வாறு பிழையான தீர்ப்புகள் வழங்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அனைத்து அணிகளும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் விராட் கோஹ்லியின் இணையத்தளத்தில் ஊடுருவல் நபர்களால் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இதேநிலையில், இம்முறை நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் விராட் கோஹ்லி விளையாடவில்லை என்பதுடன், அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…