இருள், மழையால் பாதியில் கைவிடப்பட்ட றோயல்-தோமியர் கால்பந்து சமர்

0

றோயல் மற்றும் புனித தோமியர் கல்லூரிகளுக்கு இடையிலான 26 ஆவது கால்பந்து சமரில் நடுவர் மொஹமட் ரியாசியின் தவறான முடிவுக்கு மத்தியில் போட்டி பாதி நேரத்துடன் கைவிடப்பட்டது. குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நேற்று (3) நடைபெற்ற இந்தப் போட்டி கைவிடப்படும்போது இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றிருந்தது. 

தாக்குதல் ஆட்டம் ஒன்றுடன் ஆரம்பமான போட்டியின் 2 ஆவது நிமிடத்தில் செனால் டி அல்விஸ் பெனல்டி பெட்டிப் பகுதியில் இழைத்த தவறை அடுத்து புனித தோமியர் அணிக்கு ஸ்பொட் கிக் வழங்கப்பட்டது. அணித்தலைவர் செவான் எபனேசர் அதனை கோலாக மாற்றினார். 

லா லிகாவில் பார்சிலோனா பின்னடைவு; ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் ஆதிக்கம்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள்…

சாமுவேல் அஹ்ரன், செனால் டி அல்விஸ் எதிரணிக்கு கடும் சவால் கொடுக்க தோமியர்களின் அதிகமான தாக்குதல் ஆட்டம் வலது பக்கம் இருந்து வந்தது. எனினும் பெனால்டி பெட்டி பகுதிக்குள் அவர்களுக்கு எதிரான தடுப்பாட்டம் அதிகமாக இருந்ததால் கோல் பெறும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.   

புனித தோமியர் கல்லூரியின் முன்னிலையை இரண்டாக அதிகரிக்க மனிந்து ரபேலுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. தொலைவில் இருந்து பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி வலையை நோக்கி ரபேல் செலுத்தியபோதும் அது நேராக மிஷ்ரப் அசாத்திடம் சென்றது. தோமியர்களின் அதிரடி ஆட்டத்திற்கு இடையே றோயல் அணி முதல் 20 நிமிடங்களிலும் எந்த பதிலடியும் கொடுக்க முடியாத நிலையில் அந்த அணி முன்கூட்டியே மாற்று வீரரை அனுப்பியது.     

றோயல் வீரர்கள் அதிக நேரங்களில் பந்தை கைப்பற்றியபோதும் திட்டமிட்ட மற்றும் நேர்த்தியான புனித தோமியரின் பின்களத்தை முறியடிப்பது கடினமாக இருந்தது. இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியினதும் றோயல் அணியினதும் தலைவராக சிஹான் பிரபுத்த ஒருசில ப்ரீ கிக்குகளை பெற்றபோது அது எதிரணி கோல்காப்பாளருக்கு சவாலாகவே இருந்தது.  

றொயல் கல்லூரி வீரருடன் தோளுக்கு தோள் மோதிய எபன்சர் 30 ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.    

இதனைத் தொடர்ந்து மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத சூழலில் அடுத்து 10 நிமிடங்களிலும் போட்டியைத் தொடர நடுவர் ரியாசி எடுத்த மோசமான முடிவு வீரர்களை ஆபத்தில் தள்ளுவதாக இருந்தது. இதன் போது றோயல் கல்லூரிக்கு போட்டியை சமன் செய்ய வாய்ப்பு ஒன்று கிட்டிய நிலையில் பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.   

தோமியர் அணி கோல்காப்பாளர் தர்மேந்திரா சிவதர்சன் போதிய வெளிச்சமின்மை பற்றி நடுவரிடம் முறையிட்டபோதும் அவர் தொடர்ந்தும் போட்டியை முன்னெடுத்தார். மைதானத்தில் தென்படாத சூழலுக்கு மத்தியில் சிவதர்சன் பந்தை தடுக்க தவற றோயல் கல்லூரி அணிக்கு தேவையான பதில் கோல் பெறப்பட்டது. பாதி நேரத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அந்த கோல் பெறப்பட்டது.  

பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணி வலுவான நிலையில்

சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் 19 வயதுக்கு…

கடும் மழை பெய்ய ஆரம்பித்ததை அடுத்து முதல் பாதி ஆட்டம் முடிந்ததோடு 2 ஆவது பாதி ஆட்டத்தை ஆரம்பிக்க தயாரானபோது மைதானத்தில் நீர் நிரம்பி இருந்ததோடு மேலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் போட்டியை கைவிட அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த போட்டியை வேறு ஒரு திகதிக்கு மாற்றுவது குறித்து இரு கல்லூரிகளும் தீர்மானிக்கும்.  

கனிஷ்ட போட்டிகளின் முடிவுகள்

  • 12 வயதுக்கு உட்பட்ட ‘A’ – புனித தோமியர் பெனல்டி மூலம் வெற்றி
  • 12 வயதுக்கு உட்பட்ட ‘B’ – றோயல் 2-0 என வெற்றி 
  • 14 வயதுக்கு உட்பட்ட ‘A’ – றோயல் பெனல்டி மூலம் வெற்றி
  • 14 வயதுக்கு உட்பட்ட ‘B’ – புனித தோமியர் பெனல்டி மூலம் வெற்றி
  • 16 வயதுக்கு உட்பட்டது – 1-1 மற்றும் றோயல் பெனல்டி மூலம் வெற்றி 

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<