சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, பங்களாதேஷ் தரப்பு வலுப்பெற்ற நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷின் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர் என்பவற்றில் விளையாடுகின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இளையோர் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்த நிலையில், நான்கு நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (2) குல்னா நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் தரப்பு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை இளம் வீரர்களுக்கு வழங்கியது.
இலங்கை இன்னும் சரியாக தயாராக வேண்டும் – ருமேஷ் ரத்நாயக்க
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான……….
அதன்படி, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த சமிந்து விக்கிரமசிங்க சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார். எனினும், ஏனைய இலங்கை வீரர்களில் லக்ஷான் கமகே தவிர்ந்த ஏனையோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால், 54.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 184 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக் கொண்டது.
இலங்கை வீரர்களின் துடுப்பாட்டம் சார்பில் சமிந்து விக்கிரமசிங்க அரைச்சதம் பூர்த்தி செய்து 11 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றார். அதேநேரம், லக்ஷான் கமகே 47 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீன் ஆலோம் அதிரடியான பந்துவீச்சினை வெளிப்படுத்தி 62 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, அஷிகுர் ரஹ்மான் ருஹிட் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணியினர், போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றனர்.
பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பிரான்திக் நவ்ரோஷ் நபில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்பட அல்வி கொக் 8 ஓட்டங்களுடன் உள்ளார்.
இலங்கை இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த சமிந்து விக்கிரமசிங்க பங்களாதேஷ் தரப்பில் பறிபோயிருந்த 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | c Shahadat Hossain b Ashiqur Rahman Ruhit | 73 | 105 | 11 | 0 | 69.52 |
Thaveesha Abhishek | c Ashraful Islam b Shahin Alom | 8 | 43 | 0 | 0 | 18.60 |
Ravindu De Silva | c Shahadat Hossain b Shahin Alom | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Sonal Dinusha | c Pritom Kumar b Shahin Alom | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Nipun Dananjaya | c Pritom Kumar b Shahin Alom | 29 | 41 | 5 | 0 | 70.73 |
Avishka Perera | c Ashiqur Rahman Ruhit b Mehedi Hasan | 2 | 24 | 0 | 0 | 8.33 |
Lakshan Gamage | c Meherab Hossain Ahin b Shahin Alom | 47 | 68 | 5 | 1 | 69.12 |
Dunith Wellalage | c Pritom Kumar b Shahin Alom | 17 | 27 | 3 | 0 | 62.96 |
Raveen De Silva | b Shahin Alom | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Amshi De Silva | b Ashiqur Rahman Ruhit | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ruvin Peiris | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 1 , lb 0 , nb 3, w 2, pen 0) |
Total | 184/10 (54.3 Overs, RR: 3.38) |
Fall of Wickets | 1-46 (16.1) Thaveesha Abhishek, 2-57 (18.3) Ravindu De Silva, 3-58 (18.5) Sonal Dinusha, 4-115 (32.2) Nipun Dananjaya, 5-115 (33.1) Chamindu Wickramasinghe, 6-132 (40.5) Avishka Perera, 7-154 (48.2) Dunith Wellalage, 8-163 (50.6) Raveen De Silva, 9-168 (51.4) Amshi De Silva, 10-184 (54.3) Lakshan Gamage, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mehedi Hasan | 14 | 1 | 36 | 1 | 2.57 | |
Shahin Alom | 17.3 | 5 | 62 | 7 | 3.58 | |
Ashiqur Rahman Ruhit | 14 | 0 | 60 | 2 | 4.29 | |
Ashraful Islam | 8 | 2 | 23 | 0 | 2.88 | |
Meherab Hossain Ahin | 1 | 0 | 2 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Prantik Nawrose Nabil | c Avishka Perera b Dunith Wellalage | 98 | 181 | 15 | 0 | 54.14 |
Sajid Hossain Seam | c Avishka Perera b Chamindu Wickramasinghe | 26 | 32 | 4 | 0 | 81.25 |
Pritom Kumar | c Dunith Wellalage b Chamindu Wickramasinghe | 6 | 14 | 1 | 0 | 42.86 |
Alvi Hoque | c Sonal Dinusha b Amshi De Silva | 72 | 226 | 2 | 1 | 31.86 |
Shahadat Hossain | c Thaveesha Abhishek b Nipun Dananjaya | 50 | 121 | 3 | 0 | 41.32 |
Amite Hasan | lbw b Ruvin Peiris | 18 | 23 | 3 | 0 | 78.26 |
Meherab Hossain Ahin | not out | 33 | 77 | 5 | 0 | 42.86 |
Ashraful Islam | lbw b Dunith Wellalage | 6 | 11 | 1 | 0 | 54.55 |
Mehedi Hasan | c Lakshan Gamage b Nipun Dananjaya | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Ashiqur Rahman Ruhit | lbw b Nipun Dananjaya | 11 | 40 | 1 | 0 | 27.50 |
Shahin Alom | c Amshi De Silva b Nipun Dananjaya | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Extras | 34 (b 10 , lb 2 , nb 12, w 10, pen 0) |
Total | 354/10 (120.4 Overs, RR: 2.93) |
Fall of Wickets | 1-41 (11.1) Sajid Hossain Seam, 2-48 (13.5) Pritom Kumar, 3-183 (62.5) Prantik Nawrose Nabil, 4-264 (88.4) Alvi Hoque, 5-287 (95.3) Amite Hasan, 6-298 (100.1) Shahadat Hossain, 7-309 (103.2) Ashraful Islam, 8-310 (104.6) Mehedi Hasan, 9-340 (118.3) Ashiqur Rahman Ruhit, 10-354 (120.4) Shahin Alom, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Amshi De Silva | 21 | 3 | 79 | 1 | 3.76 | |
Ruvin Peiris | 20 | 5 | 46 | 1 | 2.30 | |
Chamindu Wickramasinghe | 9 | 3 | 19 | 2 | 2.11 | |
Dunith Wellalage | 31 | 7 | 68 | 2 | 2.19 | |
Lakshan Gamage | 13 | 0 | 53 | 0 | 4.08 | |
Raveen De Silva | 10 | 1 | 42 | 0 | 4.20 | |
Nipun Dananjaya | 16.4 | 5 | 35 | 4 | 2.13 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | c Pritom Kumar b Mehedi Hasan | 24 | 16 | 4 | 1 | 150.00 |
Thaveesha Abhishek | c Pritom Kumar b Mehedi Hasan | 18 | 29 | 3 | 0 | 62.07 |
Ravindu De Silva | b Meherab Hossain Ahin | 33 | 84 | 4 | 0 | 39.29 |
Sonal Dinusha | c Alvi Hoque b Mehedi Hasan | 55 | 148 | 4 | 0 | 37.16 |
Nipun Dananjaya | c Amite Hasan b Ashraful Islam | 81 | 318 | 4 | 0 | 25.47 |
Avishka Perera | c Pritom Kumar b Prantik Nawrose Nabil | 18 | 62 | 2 | 0 | 29.03 |
Lakshan Gamage | c Shahin Alom b Ashiqur Rahman Ruhit | 45 | 96 | 7 | 0 | 46.88 |
Dunith Wellalage | c Pritom Kumar b Ashraful Islam | 45 | 92 | 7 | 0 | 48.91 |
Raveen De Silva | not out | 4 | 46 | 0 | 0 | 8.70 |
Amshi De Silva | lbw b Ashraful Islam | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Ruvin Peiris | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 21 (b 7 , lb 6 , nb 6, w 2, pen 0) |
Total | 346/9 (149 Overs, RR: 2.32) |
Fall of Wickets | 1-33 (4.6) Chamindu Wickramasinghe, 2-44 (8.5) Thaveesha Abhishek, 3-107 (31.5) Ravindu De Silva, 4-156 (58.3) Sonal Dinusha, 5-187 (74.6) Avishka Perera, 6-255 (104.6) Lakshan Gamage, 7-327 (133.2) Dunith Wellalage, 8-342 (145.5) Nipun Dananjaya, 9-346 (147.4) Amshi De Silva, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mehedi Hasan | 20 | 3 | 52 | 3 | 2.60 | |
Shahin Alom | 25 | 8 | 70 | 0 | 2.80 | |
Ashiqur Rahman Ruhit | 25 | 8 | 44 | 1 | 1.76 | |
Ashraful Islam | 34 | 6 | 76 | 3 | 2.24 | |
Meherab Hossain Ahin | 24 | 4 | 44 | 1 | 1.83 | |
Shahadat Hossain | 2 | 0 | 5 | 0 | 2.50 | |
Prantik Nawrose Nabil | 16 | 5 | 20 | 1 | 1.25 | |
Sajid Hossain Seam | 3 | 0 | 22 | 0 | 7.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Prantik Nawrose Nabil | lbw b Amshi De Silva | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Sajid Hossain Seam | not out | 18 | 46 | 2 | 0 | 39.13 |
Pritom Kumar | c Sonal Dinusha b Amshi De Silva | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Alvi Hoque | b Raveen De Silva | 7 | 23 | 0 | 0 | 30.43 |
Shahadat Hossain | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 37/3 (14 Overs, RR: 2.64) |
Fall of Wickets | 1-10 (2.1) Prantik Nawrose Nabil, 2-15 (2.6) Pritom Kumar, 3-36 (13.2) Alvi Hoque, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Amshi De Silva | 3 | 1 | 10 | 2 | 3.33 | |
Ruvin Peiris | 3 | 0 | 14 | 0 | 4.67 | |
Dunith Wellalage | 4 | 2 | 4 | 0 | 1.00 | |
Nipun Dananjaya | 2 | 1 | 4 | 0 | 2.00 | |
Raveen De Silva | 2 | 0 | 5 | 1 | 2.50 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<