லா லிகாவில் பார்சிலோனா பின்னடைவு; ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் ஆதிக்கம்

79

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (02) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரங்கள் வருமாறு.

  • பார்சிலோனா எதிர் லெவன்டே

ஏழு நிமிட இடைவெளிக்கும் லெவன்டே அணிக்கு மூன்று கோல்களை விட்டுக்கொடுத்த லா லிகாவில் முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  

மெஸ்ஸியின் இரட்டை கோலால் லா லிகாவில் பார்சிலோனா முதலிடம்

லியோனல் மெஸ்ஸியின் இரட்டைக் கோல்…..

இந்தத் தோல்வியுடன் பார்சிலோனா இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. நெல்சன் செமேடோ மீது ஜோர்ஜ் மிரமொன் இழைத்த தவறை அடுத்து கிடைத்த பெனால்டியை கொண்டு லியொனல் மெஸ்ஸி கோல் ஒன்றை பெற்றார்.

எனினும் போட்டியில் முன்னிலை பெற்றிருந்த பார்சிலோனாவுக்கு லெவன்டே இரண்டாவது பாதியில் அதிர்ச்சி கொடுத்தது. 61 ஆவது நிதிடத்தில் ஜோஸ் கெம்பானாவின் கோல் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த லெவன்டே இரண்டு நிமிடங்களில் போர்ஜா மெயோரல் மூலம் இரண்டாவது கோலை புகுத்தியதோடு அடுத்த 5 ஆவது நிமிடத்தில் மென்ஜா ரடோஜா மூன்றாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.    

எனினும் மெஸ்ஸி தனித்து பெற்ற கோல் ஓன்று வீடியோ நடுவர் உதவி மூலம் நிராகரிக்கப்பட்டது பார்சிலோனாவுக்கு ஏமாற்றம் தந்தது. அப்போது அன்டோனியோ கிரீஸ்மான் ஓப் சைட் சென்றிருந்தார்.  

இந்தப் பருவத்தில் பார்சிலோனா தனது 11 லீக் போட்டிகளில் பெறும் மூன்றாவது தோல்வி இதுவாகும்.   

  • லிவர்பூல் எதிர் அஸ்டன் வில்லா

போட்டி முடியும் தறுவாயில் சாடியோ மானே பெற்ற கோல் உட்பட கடைசி நேரத்தில் பெற்ற இரட்டைக் கோல்கள் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது

இதன்மூலம் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புக் சம்பியன்ஸ் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 6 புள்ளிகள் இடைவெளியில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

கடந்த 10 மாதங்களாக தோல்வியுறாத அணியாக நீடித்து வந்த லிவர்பூல் வில்லா பார்க்கில் நடைபெற்ற போட்டியின் 20 ஆவது நிமிடத்திலேயே எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுத்து அந்த கௌரவத்தை இலக்கும் நிலைக்கு முகம்கொடுத்தது.  

எனினும் அன்டி ரொபட்சன் 87ஆவது நிமிடத்தில் அபார கோல் ஒன்றை புகுத்தி அந்த நெருக்கடியில் இருந்து அணியை மீட்டர். இந்நிலையில் காயமுறிப்பு நேரத்தின் 94 ஆவது நிமிடத்தில் ட்டிரட் அலெக்சாண்டர் ஆர்லோட்டின் கோனர் உதை டொன் ஹீட்டனிடம் சென்றபோது அவர் கோல் திசையை நோக்கி லாவகமாக செலுத்த கோல் கம்பத்திற்கு அருகில் இருந்த சாடியோ மானோ அதனை தலையால் முட்டி கோலாக மாற்றினார்.  

  • மன்செஸ்டர் யுனைடட் எதிர் போர்ன்மௌத்

விடாலிட்டி அரங்கில் நடைபெற்ற போட்டியில் அண்மைய சில போட்டிகளில் சோபித்து வந்த மன்செஸ்டர் யுனைடட் அணி போர்ன்மௌத்திடம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது

மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்கு முறை எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்த யுனைடட் அணி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றது. எனினும் சரியாக முதலாவது பாதி முடியும் நேரத்தில் ஜோசுவா கிங் பெற்ற கோல் போர்ன்மௌத் அணிக்கு வெற்றி கோலாக மாறியது

வரலாற்று வெற்றியுடன் தங்கத்தை தமதாக்கிய வட மாகாண உதைபந்து அணி

45ஆவது தேசிய விளையாட்டு விழாவின்…….

ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்து இந்தப் போட்டியை ஆரம்பித்த யுனைடட் அணி தற்போது 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. லீக் போட்டிகளில் இந்தக் கட்டத்தில் யுனைடட் அணி 1986-87 பருவத்திற்கு பின்னரே அதிகம் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

  • ஆர்சனல் எதிர் வொல்வஸ்

இம்முறை ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் வெற்றியின்றி நீடிக்கும் ஆர்சனல் அணி வொல்வசுடனான போட்டியில் 1-1 என சமநிலையுடன் ஆறுதல் பெற்றது

போட்டியை உத்வேகத்துடன் ஆரம்பித்த ஆர்சனல் 21 ஆவது நிமிடத்தில் அவுபமயங் மூலம் கோல் பெற்று முன்னிலை அடைந்தபோதும் போட்டி முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கும்போது ராவுல் ஜிமனஸ் வொல்வஸ் சார்பில் பதில் கோல் திருப்பினார்.   

எனினும் ஆர்சனல் அணி 17 புள்ளிகளுடன் ப்ரீமியர் லீக்கில் 5ஆவது இடத்தில் நீடிக்கிறது

  • மன்செஸ்டர் சிட்டி எதிர் சௌதம்டன்

தனது சொந்த மைதானத்தில் தடுமாற்றத்தை சந்தித்த மன்செஸ்டர் சிட்டி அணி செர்ஜியோ அகுவேரா மற்றும் கைல் வோகர் கடைசி நேரத்தில் புகுத்திய கோல்கள் மூலம் சௌதம்டனுக்கு எதிரான போட்டியில் 2-1 என வெற்றியீட்டிக்கொண்டது

சிட்டி ஒப் மன்செஸ்டர் அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியில் 13 ஆவது நிமிடத்தில் சௌதம்டன் வீரர் ஜேம்ஸ் வோட்ப்ரோன் பெற்ற கோலினால் சிட்டி அணி கடும் சவாலை எதிர்கொண்டது

ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ

ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A……

குறிப்பாக கடந்த வாரம் லெய்ஸ்டர் அணியிடம் 9-0 எனத் தோற்று வார நடுப்பகுதியில் லீக் கிண்ணத்தில் சிட்டியிடம் 3-0 என தோற்ற சௌதம்டனின் இந்த முன்னிலை அதிர்ச்சி தருவதாக இருந்தது

சௌதம்டனின் தற்காப்பு ஆட்டத்திற்கு முன்னர் சிட்டி அணி பதில் கோல் திருப்புவதற்கு தொடர்ந்து போராட வேண்டி இருந்தது. இந்நிலையில் 70 ஆவது நிமிடத்தில் வோக்கர் தந்த பந்தை குவேரா கோலாக மாற்றினார்.   

தொடர்ந்து 86 ஆவது நிமிடத்தில் கைல் வோக்கர் சிட்டி அணி சார்பில் வெற்றி கோலை புகுத்தினார்

  • வட்போர்ட் எதிர் செல்சி 

ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் செல்சி அணி மொத்தம் 23 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. போட்டியின் 5 ஆவது நிமிடத்திலேயே டொம்மி அப்ரஹாம் கோல் பெற்று செல்சியை முன்னிலை பெறச் செய்ததோடு அந்த அணி சார்பில் கிரிஸ்டியன் புலுசில் 55 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலை பெற்றார்

இம்முறை ப்ரீமியர் லீக்கில் வெறுமனே 5 புள்ளிகளை மாத்திரம் பெற்றிருக்கும் வட்போர்டுக்கு 88 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை டிலோபியு கோலாக பெற்றபோதும் அந்த அணியின் தோல்வி நிச்சயமானது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<