தடைகளைத் தாண்டி இலக்கை எட்டிய ரெட் ஸ்டார் கால்பந்து கழகம்

328

ரட்ணம் கழகத்திற்கு எதிராக வலுவான வெற்றி ஒன்றை உறுதி செய்யும் கடைசி விசில் ஊதப்பட்டதும் வெர்னன் பெர்னாண்டோ அரங்கில் வெற்றிக் கொண்டாட்டம் ஆரம்பமானது. இதன் மூலம் இந்த பருவகால பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (Division I) கால்பந்து தொடரில் சம்பியனான ரெட் ஸ்டார் கால்பந்து கழகம் டயலொக் சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்றது.

2015 மற்றும் 2016இல் தகுதி உயர்வு பெறுவதை நூலிழையில் தவறவிட்ட ரெட் ஸ்டார் கழகம், 2017 பிரீமியர் லீக் பிரிவு ஒன்று பருவத்தில் ஒரே ஒரு நோக்கத்துடனேயே களமிறங்கியது.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக எமது சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டோம். சம்பியன்ஸ் ஆவது மாத்திரமே இந்த ஆண்டின் இலக்காக இருந்தது” என்று ரெட் ஸ்டார் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரமீஸ் ThePapare.com இற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார்.

சம்பியன் லீக்கிற்கான வெற்றிப் பாதையில் ரெட் ஸ்டார் அணி

தற்பொழுது நடைபெற்று வரும் பிரிவு

நாம் சம்பியன்ஸ் ஆகாவிட்டால் அல்லது சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறாவிட்டால் என்னை கழகத்தில் இருந்து விலக்கிக் கொள்வதாக கழக முகாமையும் எனக்கு பாரிய சவாலைத் தந்தது. இந்த பருவத்தை நான் அதிக அழுத்தங்களுடனேயே ஆரம்பித்தேன் என இம்முறை பருவம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்து தான் முகம்கொடுத்த அழுத்தங்கள் பற்றி ரமீஸ் இவ்வாறு கூறினார்.

சொந்த மைதானத்தில் SLTB விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 2-0 என்ற வெற்றியுடனேயே ரெட் ஸ்டார் 2017 பருவத்தை ஆரம்பித்தது. ரெட் ஸ்டார் அணிக்கு தனது குழு நிலையில் செரெண்டிப் கால்பந்து கழகத்திற்கு எதிரான போட்டி கடினமாக இருந்தது. சம்பியனாகும் நோக்குடன் களமிறங்கிய மற்றொரு அணியான செரெண்டிப் கழகத்துடனான அந்தப் போட்டியை சமநிலை செய்து பாதுகாத்துக் கொண்டது ரெட் ஸ்டார்.

அந்தப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பின்னடைவுடன் ரெட் ஸ்டார் அணி இரண்டாவது பாதி ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும் செரண்டிப் அணித்தலைவர் மொஹமட் ராஜ் ஷெரோன் சிவப்பு அட்டை பெற்றதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ரெட் ஸ்டார் அணி மேலதிக நேரம் வரை நீண்ட, பரபரப்பான போட்டியை 2-2 என சமநிலை செய்தது.

   

அந்தப் போட்டி அவர்களின் ஆரம்ப காலத்தை ஒத்திருந்தது. பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வாக்குறுதி அளிக்கப்பட்ட பூமிக்கான பாதை பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது. கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது ரெட் ஸ்டார் அணிக்கு தமது சொந்த கால்பந்து லீக்கிற்குக் கூட நுழைவு மறுக்கப்பட்டது. எனினும் அது மற்றொரு லீக்கில் ஏற்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பின் ரெட் ஸ்டார் கால்பந்து கழகம் அதனை உடைத்தெறிந்து நாட்டின் பிரதான பிரிவான டயலொக் சம்பியன்ஸ் லீக்கிற்குள் நுழைந்துள்ளது.

பேருவளையை தளமாகக் கொண்ட அந்தக் கழகம் ‘பேருவளை கால்பந்து லீக்’ போட்டியில் இணையும் நோக்கத்துடன் 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எனினும் அப்போதைய பேருவளை கால்பந்து லீக்கின் தலைவருடன் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகள் காரணமாக அவர்கள் அந்த கால்பந்து லீக்கில் மறுக்கப்பட்டனர்.

தனது சொந்த லீக்கில் மறுக்கப்பட்ட நிலையில் பேருவளையில் இருந்து வடக்காக 45 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தெஹிவளை – கல்கிஸ்சை கால்பந்து லீக்கே அவர்களின் சொந்த லீக்காக மாறியது. அந்த ஆண்டு லீக் தொடரில் ரெட் ஸ்டார் இரண்டாம் இடத்தை பிடித்ததோடு பிரீமியர் லீக் இரண்டாம் பிரிவில் விளையாடத் தகுதி பெற்றது. 2011 மற்றும் 2012/13 ஆண்டுகள் போதிய வெற்றிகள் இன்றி கடந்து சென்றது. எனினும் 2014இல் பிரிவு இரண்டில் இரண்டாவது இடத்தை பிடித்ததோடு பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது.

அடுத்த வாரம் ஆரம்பமாகும் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக பகீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் சர்வதேச போட்டிகளுக்கான தேசிய அணியைத்

பிரிவு ஒன்றில் ரெட் ஸ்டார் அணியால் தனது முதலாவது ஆண்டில் அரை இறுதிக்கு முன்னேற முடிந்தது. அடுத்த ஆண்டிலும் இதே நிலை தொட ர்ந்தபோது அவ்வாறு மீண்டும் இடம்பெற வழிவகுப்பதில்லை என்று அந்த அணி உறுதிபூண்டது.

இவ்வாற ஒரு நிலையில் இம்முறை ரெட் ஸ்டார் குழு நிலை போட்டிகளில் ஐந்து வெற்றி, இரண்டு சமநிலை மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றது. பேருவளை வீரர்கள் ஏற்கனவே சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் குழு நிலை போட்டிகளின் கடைசி ஆட்டத்திலேயே தோல்வியுற்றார்கள். எனினும் அந்த தோல்வி ஒரு கசப்பு மருந்தாக இருந்தது.

ரட்ணம் விளையாட்டுக் கழகம் சுப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியாக அது இருந்தது. போட்டியை நடத்தும் அணியாக இருந்த ரட்ணமுக்கு அதிர்ச்சி தரும் வகையில் 15 நிமிடங்களுக்குள்ளேயே ரெட் ஸ்டார் 3-0 என முன்னிலை பெற்றது. அடுத்து நடந்தது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. முதல் பாதி நேரத்தில் போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்த ரட்ணம், இரண்டாவது பாதியின் நடுப்பகுதியாகும்போது 6-3 என முன்னிலை பெற்றது. கடைசி நேர போராட்டத்தின் மூலம் ரெட் ஸ்டார் இரண்டு கோல்களை புகுத்தியபோதும் அது போதுமாக இருக்கவில்லை.

“அந்த போட்டியில் நாம் 15 நிமிடங்களுக்குள் 3-0 என முன்னிலை பெற்று ரட்ணமிடம் 6-5 என தோற்றோம். போட்டி முடிவதற்குள் வீரர்கள் அதிகம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அது எமக்கு பாதகமானது. நாம் சிறுபிள்ளைத்தனமான தவறுகளை செய்த பின் சுதாகரித்து 6-5 என கொண்டுவரும் முன் 6 கோல்கள் போடப்பட்டன” என்று இந்த பருவத்தில் சந்தித்த பின்னடைவுகள் பற்றி ரமீஸ் கருத்து கூறினார்.

குழு நிலை போட்டி முடிவுகள்

ரெட் ஸ்டார் FC 2 – 0 SLTB SC (சொந்த மைதானம்)

ரெட் ஸ்டார் FC 2 – 2 செரண்டிப் FC (சொந்த மைதானம்)

ரெட் ஸ்டார் FC 2 – 1 சிவில் பாதுகாப்பு SC (சொந்த மைதானம்)

ரெட் ஸ்டார் FC 1 – 1 ஹேய்லைன் SC (வெளி மைதானம்)

ரெட் ஸ்டார் FC 1 – 0 படோவிட்ட யுனைட்டெட் (வெளி மைதானம்)

ரெட் ஸ்டார் FC 4 – 1 ஓல்ட் மசெடோனியன்ஸ் SC (வெளிமைதானம்)

ரெட் ஸ்டார் FC 5 – 2 சென் மேரிஸ் SC (சொந்த மைதானம்)

ரெட் ஸ்டார்FC 5 – 6 ரட்ணம் SC (சொந்த மைதானம்)

B குழு – புள்ளி அட்டவணை

ரட்ணமுடனான தோல்வி கழகத்திற்கும் வீரர்களுக்கும் உத்வேகத்தை தூண்டியது. அது பற்றி ரமீஸ் கூறும்போது,

“சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்ததும் 4 போட்டிகளில் சம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவேன் என்று நான் எனது நிர்வாத்திற்கு குறிப்பிட்டேன், அதனை செய்ய என்னால் முடியுமாக இருந்தது” என்றார்.

முதல் தடைதாண்டியாக மற்றுமொருமுறை செரண்டிப் அணிக்கு எதிரான போட்டியே இருந்தது. இம்முறை சொந்த மைதானத்திற்கு வெளியில் நாவலப்பிட்டி ஜயதிலக்க அரங்கில் போட்டி நடந்தது. தற்காப்பு ஆட்டம் ஒன்றின் மூலம் 1-0 என அந்த போட்டியை அவர்களால் வெல்ல முடிந்தது. கொம்ரட்ஸ் அணியுடனான போட்டியில் எந்த சவாலும் இன்றி ரெட் ஸ்டார் 3-0 என வெற்றி பெற்றது. ஒரு வாரத்தின் பின் கம்பளை வீகுலவத்த மைதானத்தில் நடந்த ரெட் சன் அணிக்கு எதிரான போட்டியையும் ரெட் ஸ்டார் அதே கோல் வித்தியாசத்தில் வென்றது.

மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தரமுயர்வு பெறுவதற்கும் சம்பியனாவதற்கும் வெளி மைதானத்தில் ரட்ணம் அணியை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முன்னைய போட்டியின் முதல் 15 நிமிடத்தில் செய்த சாதனையை செய்வதற்கு ரெட் ஸ்டார் அணிக்கு முடியுமாக இருந்தது. ஒட்டுமொத்த 90 நிமிடங்களிலும் ரெட் ஸ்டார் அணி 6-0 என ரட்ணம் அணியை வீழ்த்தியது.

“குழு நிலை போட்டியில் நாம் உறுதியான நிலையில் இருந்து அவர்களுக்கு வெற்றியை விட்டுக் கொடுத்தது பற்றி கால்பந்து வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் உத்வேகத்துடன் இருந்தார்கள்” என்று தாம் பெற்ற ஏமாற்றத்தில் இருந்து உத்வேகத்தை பெற்றது மற்றும் அணி மேலும் வலுப்பெறச் செய்தது பற்றி ரமீஸ் விபரித்தார்.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பக்கீர் அலி

இலங்கை அணியின்

திஹாரி யூத் அணியை 5-2 என வென்ற ரெட்ஸ் ஸ்டார் சுப்பர் 8 சுற்றில் தோல்வியுறாத அணியாக முடித்துக் கொண்டது. இடோவோ முஹமது தலைமையில் மொஹமட் ரகுமானின் அபார ஆட்டத்தின் உதவியோடு ரெட் ஸ்டார் அணிக்காக பீட்டர் சில்வனுஸ் 20 இற்கும் அதிகமான கோல்களை இத்தொடரில் புகுத்தியுள்ளமை புகுத்தினார்.

“நிர்வாகத்தினர் மற்றும் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள். அணியை சம்பியன்ஸ் லீக்கிற்கு அழைத்துச் செல்வதே எனது இலக்காக இருந்தது. நானும் கூட இதுவரை 19 ஆண்டுகள் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடியுள்ளேன். நான் தொடர்ந்தும் விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு அணியை அதற்குள் அழைத்து வருவது உண்மையிலேயே எனக்கு பெருமை தரும் தருணமாகும். என்னிடம் நல்லதொரு அணி இருக்கிறது. சம்பியன்ஸ் லீக் பருவத்திற்கு சிலவேளை எனக்கு மேலும் 2 அல்லது 3 வீரர்கள் தேவைப்படுவார்கள்” என்று பெருமை மற்றும் நிம்மதி பெருமூச்சுவிட்ட ரமீஸ், எதிர்காலம் பற்றிய திட்டத்தை குறிப்பிட்டார்.