ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியை தவறவிடுவாரா தீக்ஷன?

Asia Cup 2023

1361

இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகத்திடமாகியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற சுப்பர் 4 போட்டியின் போது மஹீஷ் தீக்ஷனவின் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டது.

>> த்ரில் வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

பௌண்டரி ஒன்றை தடுக்க முயற்சிக்கும் போது இவருக்கு தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டது. எனினும் இலங்கை அணிக்காக மிகுதி ஓவர்களை வீசிவிட்டு களத்திலிருந்து வெளியேறினார்.

இவரின் தசைப்பிடிப்பு உபாதைக்கான ஸ்கேன் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த ஸ்கேன் பரிசோதனையின் பின்னர் அவருடைய உபாதை நிலை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகும்.

எவ்வாறாயினும் உலகக்கிண்ணம் நெருங்கிவரும் நிலையில் மஹீஷ் தீக்ஷன ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹீஷ் தீக்ஷன அணியில் விளையாடாமல் இருந்தால், அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த அல்லது வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) இந்தியா அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<