முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்!

Asia Cup 2023

186

ஆசியக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் முதலிரண்டு போட்டிகளில் துடுப்பாட்ட வீரர் கே.எல். ராஹுல் விளையாடமாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதையிலிருந்து குணமடைந்துவரும் கே.எல். ராஹுல் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என தலைமை பயிற்றுவிப்பாளர் ராஹுல் டிராவிட் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

>> ஒருநாள் ஆசியக் கிண்ணத்திற்கான ஆப்கான் குழாம் அறிவிப்பு

கே.எல். ராஹுல் இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரின் போது உபாதைக்கு முகங்கொடுத்தார். இவருடைய தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து குணமடைந்திருந்த போதும், முழு உடற்தகுதியின்றி ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்திருந்தார்.

எவ்வாறாயினும் தற்போது இவரால் முதலிரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பல்லேகலையில் நடைபெறுவுள்ள போட்டிகளில் இவர் விளையாட மாட்டார் எனவும், சுபர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றால் போட்டிகளில் விளையாடுவார் என டிராவிட் தெரிவித்துள்ளார்.

கே.எல். ராஹுலின் துடுப்பாட்ட பயிற்சிகளில் சிறப்பாக ஈடுபட்டுவரும் போதும், அவருடைய விக்கெட் காப்புக்கான உடற்தகுதி தொடர்பில் கேள்வியுள்ளதாகவும் டிராவிட் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் இந்திய குழாத்தில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக இசான் கிஷன் இணைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விக்கெட் காப்பாளராக சஞ்சு சம்சன் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<