Home Tamil வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

91

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தால் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

 இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், இசுரு உதான

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள..

மேற்கிந்திய தீவுகள்

சுனில் அம்ப்ரிஸ், ஷேய் ஹோப், டெரன் பிராவோ, ரொஸ்டன் ஷேஸ், ஜேசன் ஹோல்டர், கீரன் பொல்லார்ட் (தலைவர்), அல்ஸாரி ஜோசப், கீமோ போல், நிக்கோலஸ் பூரன், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர், ஷெல்டன் கொட்ரல்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் விக்கெட்டினை 10 ஓட்டங்களுக்கு இழந்த போதும், ஷேய் ஹோப்பின் நிதானமான துடுப்பாட்டத்துடன் ஓட்டங்களை குவித்தது.

ஷேய் ஹோப் மற்றும் டெரன் பிராவோ ஜோடி இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுத்து ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதும், 39 ஓட்டங்களை பெற்றிருந்த பிராவோ துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். இவரையடுத்து துடுப்பாடக் களமிறங்கிய ரொஸ்டன் சேஸ், ஷேய் ஹோப்புடன் இணைந்து மற்றுமொரு இணைப்பாட்டத்தை பகிர்ந்தார்.

இவர்களின் இணைப்பாட்டத்தின் போது ஷேய் ஹோப் அரைச் சதம் கடக்க, மூன்றாவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில், ரொஸ்டன் சேஸ் 41 ஓட்டங்களை பெற்றிருந் போது, நுவன் பிரதீப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வருகைதந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் ஏமாற்றத்தை வழங்க, ஷேய் ஹோப் தன்னுடைய 9 ஆவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து 115 ஓட்டங்களுடன் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களான கீமோ போல் மற்றும் ஹெய்டன் வோல்ஸ் ஆகியோர் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணி மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொள்ள உதவினர். கீமோ போல் 32 ஓட்டங்களையும், ஹெய்டன் வோல்ஸ் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் குறைந்த பந்துகளுக்கு பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் இசுரு உதான 3 விக்கெட்டுகளை வீழ்த்த, திசர பெரேரா மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைப் பகிர்ந்தனர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அரைச் சதங்கள் மற்றும் வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன், 49.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் அணிக்கு நேர்த்தியான இணைப்பாட்டத்தை பகிர்ந்து ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்த சில நிமிடங்களில் அரைச் சதம் கடந்திருந்த அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ், குசல் பெரேராவுடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப தொடங்கினார்.

எனினும், குசல் மெண்டிஸ் 20 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஹெய்டன் வோல்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 5 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை வழங்கினர்.

இறுதியாக இலங்கை அணிக்கு நம்பிக்கையை கொடுத்த திசர பெரேரா வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், துரதிஷ்டவசமாக தேவையற்ற நேரத்தில் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

ஆனாலும், இலங்கை அணிக்கு கிடைத்துள்ள புதிய நட்சத்திர வீரர் என்பதை நிரூபித்த வனிந்து ஹசரங்க இறுதிவரை களத்தில் இருந்து துடுப்பெடுத்தாடி அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். லக்ஷான் சந்தகனின் உதவியுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 42 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

Photos: West Indies tour of Sri Lanka 2020 | 1st ODI

ThePapare.com | Viraj Kothalawala | 22/02/2020 Editing and re-using images..

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை பொருத்தவரை அல்ஷாரி ஜோஷப் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, கீமோ போல் மற்றம் ஹெய்டன் வோல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் பகிர்ந்தனர்.

இதன்படி, SSC மைதானத்தில் அதிகூடிய வெற்றி இலக்கை கடந்து இலங்கை அணி சாதனை படைத்தது. இதற்கு முன்னர் 1998 ஆம் ஆண்டு இலங்கை அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக போட்டியில் 286/6 என்ற வெற்றி இலக்கை கடந்திருந்தது.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிப்பதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
290/9 (49.1)

West Indies
289/7 (50)

Batsmen R B 4s 6s SR
Shai Hope b Isuru Udana 115 140 10 0 82.14
SW Ambris b Thisara Perera 3 10 0 0 30.00
Darren Bravo, run out (Kusal Mendis) 39 52 3 2 75.00
Roston Chase b Nuwan Pradeep 41 45 3 1 91.11
Nicholas Pooran c Dimuth Karunaratne b Isuru Udana 11 12 1 0 91.67
Kieron Pollard c Lakshan Sandakan b Isuru Udana 9 6 0 1 150.00
Jason Holder run out (Angelo Mathews) 12 10 2 0 120.00
Keemo Paul not out 32 17 4 1 188.24
Hayden Walsh not out 20 8 2 1 250.00


Extras 7 (b 1 , lb 2 , nb 0, w 4, pen 0)
Total 289/7 (50 Overs, RR: 5.78)
Fall of Wickets 1-10 (3.2) SW Ambris, 2-87 (19.4) Darren Bravo,, 3-172 (35.6) Roston Chase, 4-193 (39.3) Nicholas Pooran, 5-207 (41.6) Kieron Pollard, 6-230 (45.1) Shai Hope, 7-240 (46.4) Jason Holder,

Bowling O M R W Econ
Nuwan Pradeep 10 0 42 1 4.20
Thisara Perera 7 1 40 1 5.71
Isuru Udana 10 0 82 3 8.20
Angelo Mathews 3 0 17 0 5.67
Lakshan Sandakan 7 0 42 0 6.00
Wanindu Hasaranga 10 2 47 0 4.70
Dhananjaya de Silva 3 0 16 0 5.33


Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Shai Hope b Alzarri Joseph 50 55 5 1 90.91
Dimuth Karunaratne c Shai Hope b Jason Holder 52 57 7 0 91.23
Kusal Perera c Darren Bravo, b Keemo Paul 42 50 4 0 84.00
Kusal Mendis c Alzarri Joseph b Hayden Walsh 20 25 2 1 80.00
Angelo Mathews c Shai Hope b Alzarri Joseph 5 4 1 0 125.00
Dhananjaya de Silva c Keemo Paul b Hayden Walsh 18 29 2 0 62.07
Thisara Perera c Rovman Powell b Alzarri Joseph 32 22 3 1 145.45
Wanindu Hasaranga not out 42 39 4 1 107.69
Isuru Udana c Shai Hope b Keemo Paul 0 6 0 0 0.00
Lakshan Sandakan run out (SW Ambris) 3 9 0 0 33.33
Nuwan Pradeep not out 0 0 0 0 0.00


Extras 26 (b 0 , lb 11 , nb 1, w 14, pen 0)
Total 290/9 (49.1 Overs, RR: 5.9)
Fall of Wickets 1-111 (17.6) Dimuth Karunaratne, 2-121 (20.1) Avishka Fernando, 3-153 (26.6) Kusal Mendis, 4-168 (28.3) Angelo Mathews, 5-201 (36.1) Dhananjaya de Silva, 6-215 (37.4) Kusal Perera, 7-253 (42.4) Thisara Perera, 8-262 (45.3) Isuru Udana, 9-289 (49.1) Lakshan Sandakan,

Bowling O M R W Econ
Sheldon Cottrell, 10 0 69 0 6.90
Jason Holder 10 0 44 1 4.40
Keemo Paul 8.1 0 48 2 5.93
Alzarri Joseph 10 0 42 3 4.20
Roston Chase 6 0 38 0 6.33
Hayden Walsh 5 0 38 2 7.60



முடிவு – இலங்கை  அணி 1 விக்கெட்டால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<