ஒரு வருட இடைவெளியின் பின்னர் டேவிட் மாலன், சேம் பில்லிங்ஸ்

270
England vs West Indies T20

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் எட்வார்ட் ஸ்மித்தினால் இன்று (21) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உலக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர் இருதரப்பு தொடர் ஒன்றில் ஆடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிவருகின்றது.

மேற்கிந்திய தீவுகளின் சாதனை இலக்கை எட்டியது இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகளின் சாதனை இலக்கை எட்டியது இங்கிலாந்து

ஜேசன் ரோய் மற்றும் ஜோ ரூட்டின் சதங்களின் மூலம் தனது ஆதிகூடிய வெற்றி இலக்கை எட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் அதை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (20) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியினுடனான ஒருநாள் தொடருக்கான அணியில் இணைந்து கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியினுடைய விக்கெட் காப்பாளரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான ஜொஸ் பட்லர் மற்றும் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனான தெரிவு செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோயிற்கு முதல் குழந்தை கிடைக்கவுள்ளதன் காரணமாக நாடு திரும்பவுள்ள நிலையில் அவரும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இவர்களின் வெற்றிடத்திற்காக விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான சேம் பில்லிங்ஸ் ஒரு வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் (2018) மே மாதம் நடைபெற்றிருந்த டி20 சர்வதேச போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக இவர் இறுதியாக விளையாடியிருந்தார். சொந்த நாட்டிற்காக கடந்த வருடம் (2018) பெப்ரவரி மாதம் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்றிருந்த போட்டியிலேயே இறுதியாக விளையாடியிருந்தார்.

மேலும் டி20 குமாழிற்கு மற்றுமொரு வீரராக 5 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான டேவிட் மாலன் ஒரு வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் டி20 சர்வதேச குமாழில் இடம்பெற்றுள்ளார். இவர் 5 டி20 சர்வதேச போட்டிகளில் 4 போட்டிகளில் அரைச்சதம் பெற்று மொத்தமாக 250 ஓட்டங்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள டி20 சர்வதேச அணிகளின் தரப்படுத்தலின்படி இங்கிலாந்து அணி 118 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், 101 புள்ளிளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஏழாமிடத்திலும் காணப்படுகின்றது.

இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட டி20 சர்வதேச குழாம்

இயன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, சேம் பில்லிங்ஸ், டொம் கரண், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேய்ல்ஸ், கிறிஸ் ஜோர்டன், டோவிட் மாலன், லியம் ப்ளென்கட், ஆதில் ரஷீட், ஜோ ரூட், டேவிட் வில்லி, மார்க் வூட்

போட்டி அட்டவணை

5 மார்ச் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – சென்ட் லூசியா

8 மார்ச் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – சென்ட் கைட்ஸ்

10 மார்ச் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – சென்ட் கைட்ஸ்

  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க