ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரபல அவுஸ்திரேலியா வீரர்

Indian Premier League 2024

53
Indian Premier League 2024

தனிப்பட்ட காரணங்களினால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா விலகியுள்ளார்.

இம்முறை ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் அவுஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா இடம் பெற்றிருந்தார். கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான இவரை, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆடம் ஸாம்பா விலகியுள்ளார். வலது கை சுழல்பந்து வீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய 6 போட்டியில், 8 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

ஏற்கெனவே அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது ஆடம் ஸாம்பாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குமார் சங்கக்காரவின் பயிற்றுவிப்பின் கீழ் இம்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள ராஜஸ்தான் அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஆடம் ஸாம்பாவிற்குப் பதிலாக நடப்பு ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியின் சகலதுறை வீரரான தனுஷ் கோட்யானை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அவரது அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<