ஐசிசியின் சிறந்த வீரராக விராட் கோஹ்வி தெரிவு!

ICC Player of the Month Award

124

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி ஒக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மாதாந்தம் ஒரு சிறந்த வீரரை தெரிவுசெய்து அவர்களை கௌரவித்து வருகின்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை U19 மகளிர் அணி!

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் விராட் கோஹ்லி, தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் சிக்கண்டர் ரஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்பிட்ட இந்த வீரர்களிலிருந்து விராட் கோஹ்லி ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் T20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அதேநேரம், T20 உலகக் கிண்ணத்துக்கு முதல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கவாட்டியில் நடைபெற்ற T20I போட்டியில் 28 பந்துகளில் 49 ஓட்டங்களையும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 44 பந்துகளுக்கு 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார். குறிப்பாக இந்திய அணியானது T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<