தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் குழாமில் 2016 யூரோ கிண்ணத் தொடரின் இளம் வீரருக்கான விருதை வென்ற ரெனாடோ சான்சஸ் இடம்பெற தவறியுள்ளார்.
உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி
ரஷ்யாவில்…
போர்த்துக்கல் அணி முகாமையாளர் பெர்னாண்டோ சான்டோஸ் வெளியிட்டிருக்கும் 35 பேர் கொண்ட உத்தேச குழாமிலேயே 20 வயதான சான்சஸுக்கு இடம் கிடைக்கவில்லை.
சான்சஸ், வேல்ஸின் – சுவான்சி சிட்டி கழகத்திற்காக இந்த பருவத்தில் ஆடியபோதும் அந்த கழகம் பிரீமியர் லீக் தொடரில் தரமிறக்கப்பட்டுள்ளது.
2016இல் பிரான்சில் நடந்த ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற போர்துக்கல் அணியின் ஏழு போட்டிகளில் அப்போது 18 வயதான சான்சஸ் ஆறு போட்டிகளில் ஆடினார். இதன்மூலம் பயெர்ன் முனிச் அணிக்கு பெரும் தொகைக்கு ஒப்பந்தமான அந்த இளம் வீரர் சரியாக சோபிக்காததால் சுவான்சி சிட்டி கழகத்திற்கு சென்றார்.
எனினும், போர்த்துக்கல் குழாமில் மூத்த வீரர் ரிகார்டோ குவரெஸ்மா இணைக்கப்பட்டுள்ளார். 34 வயதான அவர் பசிக்டாஸ் கழகத்திற்காக இந்த பருவத்தில் சிறப்பாக ஆடி வருகிறார்.
35 வீரர்கள் கொண்ட இந்த உத்தேச குழாம் எதிர்வரும் நாட்களில் 23 வீரர்களாக குறைக்கப்படவுள்ளது.
உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி
ரஷ்யாவில் அடுத்த…
ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் B குழுவில் அங்கம் வகிக்கும் போர்த்துக்கல் அண்டை நாடான ஸ்பெயின், மொரொக்கோ மற்றும் ஈரானுடன் மோதவுள்ளது.
அதற்கு முன்னதாக ரொனால்டோ மற்றும் சகாக்கள் மே 28 ஆம் திகதி துனீசியாவுடனும், ஜுன் 2 ஆம் திகதி பெல்ஜியத்துடனும், ஜுன் 6 ஆம் திகதி அல்ஜீரியாவுடனும் பயிற்சி நட்புறவு போட்டிகளில் ஆடவுள்ளது.
போர்த்துக்கல் உத்தேச குழாம்
கோல் காப்பாளர்கள்
அன்தோனியோ லோபஸ் (லியோன்), பெடோ (கொஸ்டெபே), ருயி பெட்ரிசியோ (ஸ்போர்டிங்).
பின்கள வீரர்கள்
அன்டுனஸ் (கெடபே), ப்ரூனோ அல்வெஸ் (ரேன்ஜர்ஸ்), செட்ரிக் சோரஸ் (சௌதம்ப்டன்), ஜவோ கன்சலோ (இன்டர்), ஜோஸ் பொன்டே (டாலியன் யிபங்), லுவிஸ் நெடோ (பெனர்பாஸ்), மரியோ ருயி (நபோலஸ்), நெல்சன் சமடோ (பார்சிலோனா), பெபே (பெசிக்டஸ்), சபாயெல் குவரிரோ (டோர்ட்முண்ட்), ரியார்டோ பெரைரா (போர்டோ), ரொனால்டோ (மார்செல்ஹா), ருபேன் டயஸ் (பென்பிகா).
பிரான்ஸ் கால்பந்து லீக்கின் சிறந்த வீரராக நெய்மர் தெரிவு
பிரேசில் அணியின்…
மத்தியகள வீரர்கள்
அட்ரியன் சில்வா (லிசஸ்டர்), அன்ட்ரே கோமஸ் (பார்சிலோனா), பிரூனோ பெர்னாண்டஸ் (ஸ்போர்டிங்), ஜோவோ மரியோ (வெஸ்ட் ஹாம்), ஜோவோ மௌடின்ஹோ (மொனாகோ), மனுவேல் பெர்னாண்டஸ் (லொகோமோடிவ் மொஸ்கோ), ருபென் நெவேஸ் (வோல்வஸ்), செர்கியோ ஒலிவைரா (போர்டோ), வில்லியம் கர்வல்ஹோ (ஸ்போர்டிங்).
முன்கள வீரர்கள்
அன்ட்ரே சில்வா (ஏ.சி. மிலான்), பெர்னார்டோ சில்வா (மன்செஸ்டர் சிட்டி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியெல் மெட்ரிட்), எடெர் (லொகோமோடிவ் மொஸ்கோ), கெல்சன் மார்டின்ஸ் (ஸ்போர்டிங்), கொன்காலோ குவேடஸ் (வலென்சியா), நானி (லாசியோ), போலின்ஹோ (ப்ராகா), ரிகார்டோ குவரெஸ்மா (பசிக்டாஸ்), ரொன்னி லோபஸ் (மொனாகோ).
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க