சக நாட்டு வீரரின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பொல்லார்ட்

1608

கரீபியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எவின் லுவிஸின் சாதனை வெறும் 3 ஓட்டங்களினால் கைநழுவிப் போனமைக்கு முக்கிய காரணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிரென் பொல்லார்ட் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி

கரீபியன் பிரீமியர் லீக் T-20 போட்டித் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று முன்தினம் பார்படோஸின் பிரிட்ஜ்டொவுண் மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் ட்ரிடென்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக டியோன் வெப்ஸ்டர் 32 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 விக்கெட்டுக்களையும், தப்ரிஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பேட்ரியட்ஸ் அணி, எந்தவொரு விக்கெட்டையும் இழக்கமால் போட்டியின் 7 ஓவரில் வெற்றியிலக்கை அடைந்தது.

அவ்வணிக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லுவிஸ் ஜோடி களமிறங்கியது. 32 பந்துகளுக்கு முகங்கொடுத்த லுவிஸ், நான்கு பௌண்டரிகள் மற்றும் பதினொரு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பேட்ரியட்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 105 ஓட்டங்களைப் பெற்று கரீபியன் லீக் வரலாற்றில் பவர் ப்ளே ஓவரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற அணியாகவும் இடம்பிடித்தது.  

எனினும் போட்டியின் 7ஆவது ஓவர் நிறைவில் அவ்வணி 128 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறுவதற்கு ஓர் ஓட்டம் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில், 31 பந்தில் 97 ஓட்டங்களைக் குவித்தி லுவிஸுக்கு சதம் பெற 3 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால் 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொல்லார்ட், அதை வேண்டுமென்றே முறையற்ற பந்தாக (நோபோல்) வீசியதுடன், மறுபுறத்தில் அது அகலப்பந்தாகவும் (வைட்) அமைந்ததது. இதனால் நடுவரால் அது முறையற்ற பந்து என அறிவிக்க லுயிஸின் சதம் பெறும் வாய்ப்பு பொல்லார்ட்டால் வீணடிக்கப்பட்டதுடன் T-20 அரங்கில் 2ஆவது அதிவேக சதம் பெறும் வாய்ப்பையும் தட்டிப் பறித்தார்.

முன்னதாக .பி.எல் போட்டிகளில் பங்குபற்றி கிறிஸ் கெய்ல், 30 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஒட்டிஸ் கிப்சன்

பொல்லார்ட், சக நாட்டு வீரர் எவின் லுவிஸின் சதம் பெறும் வாய்ப்பை தட்டிப் பறித்தமை, கனவான்களின் விளையாட்டாக கருதப்படுகின்ற கிரிக்கெட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளின் போது பொல்லார்ட் எதிரணி வீரர்களை சீண்டுவதும், ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவங்கள் அதிகம் உள்ளன. இதில் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென். லூசியாஸ் ஸ்டார்ஸ் அணியின் சகலதுறை வீரர் ரஹ்கீம் கோர்ன்வேலை, பெல்லார்ட் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த சம்பவமும் அதிகளவில் பேசப்பட்டது.

அப்போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 195 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். லூசியா அணிக்காக அதிரடியாக விளையாடிய ரஹ்கீம், 44 பந்துகளுக்கு முகங்கொடுத்து 78 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காயம் காரணமாக இடைநடுவில் மைதானத்திலிருந்து வெளியேறிய போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பொல்லார்ட், அவருடைய அருகாமையில் வந்து கைவிரலை நீட்டியவாறு ஆவேசமாக ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற .பி.எல் போட்டித் தொடரின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி கோபத்துடன் பொல்லார்ட் துடுப்பு மட்டையை எறிந்திருந்தமை நினைவுகூறத் தக்கது.