பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் அடுத்த மாதத்தில்

240

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, போட்டி அட்டவணை இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

கொரோனாவினால் T20i உலகக் கிண்ண தகுதிச்சுற்று ஒத்திவைப்பு

அதன்படி, அடுத்த மாதம் இலங்கை வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடுகின்றனர். 

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன.  

இதில் முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 03ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றன. அதேநேரம், இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இலங்கை மண்ணை வந்தடைகின்றது. 

கடந்த ஆண்டின் ஜூலை மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மைதானம் யாழில்

பின்னர், இந்த டெஸ்ட் தொடரினை கடந்த ஆண்டின் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்ட்டிருந்த போதும் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் அதனை மீண்டும் பிற்போட காரணமாக அமைந்திருந்தது. இவ்வாறு இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரே தற்போது நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<