கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொவிட் தொற்று

207

போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதி செய்திருக்கின்றது.

Video – பார்சிலோனாவில் என்ன நடந்தது ?-மனம் திறந்தார் SUAREZ | FOOTBALL ULAGAM

இதேநேரம், 35 வயது நிரம்பிய ரொனால்டோவின் நோய் நிலைமை பற்றி மேலும் விபரித்த போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம், ரொனால்டோ தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்ததோடு அவரிடம் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. 

கடைசியாக நெஷனல் லீக் கால்பந்து தொடரில் பிரான்சுக்கு எதிராக ஆடிய ஜூவன்டஸ் கழக வீரரான ரொனால்டோ, கடந்த வாரம் ஸ்பெயின் கால்பந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நட்புரீதியான மோதலிலும் பங்கேற்றிருந்தார். 

அதேநேரம், கொவிட்-19 தொற்று உறுதியாகியிருப்பதன் காரணமாக தனது தாயக அணி நெஷனல் லீக் கால்பந்து தொடரில் ஸ்வீடன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை ரொனால்டோ இழக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மன்செஸ்டர் யுனைடட் வருகிறார் எடிசன் கவானி

அத்தோடு, ஜூவன்டஸ் அணி Serie A கால்பந்து தொடரில் Crotone அணிக்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியிலும், சம்பியன்ஸ் லீக்கின் குழு நிலை மோதலான டைனமோ கியிவ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு ரொனால்டோவிற்கு இல்லாமல் போகின்றது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<