கொரோனாவினால் T20i உலகக் கிண்ண தகுதிச்சுற்று ஒத்திவைப்பு

93

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாகவும் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண போட்டிக்கான மூன்று பிராந்தியங்களின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) ஐ.சி.சி அறிவித்துள்ளது.

ஐ.சி.சி இன் 7ஆவது டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8ஆவது டி-20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது

இந்த நிலையில், 2022இல் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண போட்டிக்கான ஆசிய A மண்டலத்திற்கான தகுதிச்சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

அவிஷ்கவின் அரைச்சதத்தால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த SSC

இதில் பஹ்ரைன், குவைத், மாலைதீவுகள், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பங்கேற்கவிருந்தன

எனினும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐ.சி.சி நேற்று அறிவித்தது

இதேபோல ஆப்பிரிக்கா மண்டலத்திற்கான தகுதிச்சுற்று A, B என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் நடததுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளும் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதன்படி, குறித்த போட்டிகள் அக்டோபர் மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய விராட் கோஹ்லி

இதில் ஆப்பிரிக்கா மண்டலத்திற்கான தகுதிச்சுற்று A இல் கானா, லிசொதோ, மலாவி, ருவண்டா, ஷீசெல்ஸ், சுவாஸிலாந்து, உகண்டா ஆகிய நாடுகளும், தகுதிச்சுற்று B இல் பொட்ஸ்வானா, கெமரூன், மொசாம்பிக், சீரா லியோன், தன்சானியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு ஐ.சி.சி இன் ஆப்பிரிக்கா கண்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நைஜீரியா மற்றும் கென்யாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இதனிடையே, தாய்லாந்தில் நடைபெறவிருந்த ஐ.சி.சி இன் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண போட்டிக்கான ஆசிய டிவிஷன் 2 மற்றும் ஆப்பிரிக்கா டிவிஷன் 2 இற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இங்கிலாந்து T20 தொடர்; பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இதேவேளை, 2023இல் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் மகளிருக்கான டி-20 உலகக் கிண்ண போட்டிக்கான ஆப்பிரிக்கா மண்டலத்திற்கான தகுதிச்சுற்று போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை நடைபெறும் ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<