இலங்கை – பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Pakistan tour of Sri Lanka 2022

1395

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

முதல்தர ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

குறிப்பிட்ட இந்த இரண்டு போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாம் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. தொடர்ந்து 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் பயிற்சிப்போட்டியொன்றில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

குறித்த இந்த பயிற்சிப்போட்டியை தொடர்ந்து 16ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணியானது தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவருவதுடன், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. குறித்த இந்த தொடர் அடுத்த மாதம் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டி அட்டவணை

  • பயிற்சிப்போட்டி – ஜூலை 11-13 – கொழும்பு கோல்டஸ் மைதானம்
  • முதல் டெஸ்ட் போட்டி – ஜூலை 16-20 – காலி கிரிக்கெட் மைதானம்
  • 2ஆவது டெஸ்ட் போட்டி – ஜூலை 24-28 – ஆர்.பிரேமதாஸ மைதானம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<