தர்ஜினியின் அறிமுகம் முன்னரே கிடைத்திருந்தால்

5932
Tharjini Sivalingam (centre) with City West Falcons coach Marg Lind and Nicole Richardson. Picture Damjan Janevski
Tharjini Sivalingam (centre) with City West Falcons coach Marg Lind and Nicole Richardson. Picture Damjan Janevski

உலகின் உயர்ந்த(208 cm) வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம், தான் வலைப்பந்தாட்டத் திடலினுள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றார்.

இலங்கையின் சிறந்த வலைப்பந்தாட்ட வீரங்கனையான இவர் தற்போது தனது புதிய கழக அணியான சிற்றி வெஸ்ர் பெல்கன்ஸ் (City West Falcons) அணியுடன் இணைந்து களத்தினுள்ளேயும், வெளியேயும் பல இலக்குகளை எட்டுவதற்கான முனைப்பிலுள்ளார்.

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின்..

பெல்கன்ஸ் அணி தமது புதிய வீராங்கனையை விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக் (Victorian Netball League) சுற்றுத்தொடரின் முதற்சுற்றில் அறிமுகப்படுத்தியிருந்தது.

பெல்கன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க் லின்ட்அவுஸ்திரேலியாவில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்றிருக்கும் தர்ஜினி  உண்மையிலேயே திறமையான வீராங்கனைஎன்றார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், உலகின் உயர்ந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினிக்கு வாழ்க்கையானது அவ்வளவு எளிதானதாக அமைந்திருக்கவில்லை.

அது ஒரு நீண்ட கதை, அவர் உண்மையிலேயே தனது உயரம் காரணமாக பலத்த சிரமத்திற்குள்ளானதே அதிகம்.”

அவர் தனது இளமைக்காலத்தில் தனது உயரம் காரணமாக கேலிக்கைகளிற்கும், தொந்தரவிற்கும் உள்ளாகியுள்ளார். இன்றும் கூட இலங்கையிலுள்ள சிலர் அவரது உயரத்தைப்பார்த்து நகைத்துக்கொண்டே உள்ளனர்.”

தர்ஜினி தனது முன்னாள் பயிற்றுவிப்பாளரான திலகா ஜின்தாஸ, லின்ட் மற்றும் பெல்கன்ஸ்ஸின் துணை பயிற்றுவிப்பாளர் நிக்கோலி றிச்சர்ட்சன் ஆகியோருடன் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றின் போது மேற்கொண்ட கலந்துரையாடலினூடாகவே பெல்கன்ஸிற்கு விளையாடும் வாய்ப்புப்பெற்றார்.

கலந்துரையாடலினூடாகநாங்கள் தர்ஜினி இலங்கையில் விளையாடி தனது காலத்தினை வீணடிப்பதாக அறிந்தோம்என்றார் லின்ட்.

அதன் பின்னர் அவரை மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு அவுஸ்திரேலியாவில் எம்முடன் இணைந்து ஓராண்டு காலம் விளையாடுவதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தோம்.”

சர்வதேச வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை பின்தங்கிய நிலையில்

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட சர்வதேச வலைப்பந்தாட்ட தர வரிசைப்பட்டியலில்..

லின்ட்பெல்கன்ஸ் அணியின் பிரதான நோக்கம் தர்ஜினியை அடுத்த கட்ட சுற்றுத்தொடர்களிற்கு எடுத்துச்செல்வதாகும்என்றார்.

சண்கோர்ப் சுப்பர் வலைப்பந்தாட்ட(Suncorp Super Netball) தொடரில் வெஸ்ற் கோஸ்ற் ஃபீவர்(West Coast Fever) அணியானது, இப்பருவகால போட்டிகளிற்கு தமது அணிக்கு உயர்ந்த சூட்டரிற்கான(Shooter) தேவை ஏற்படின் இவரையே நாடவுள்ளது.

ஃபீவர் அணியின் துணை பயிற்றுவிப்பாளரான றிச்சர்ட்சன் அவர்களே, தர்ஜினியின் விஷேட பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார்.

லின்ட்தர்ஜினியை முடிந்தளவு  விரைவாக அவுஸ்திரேலிய முறைக்கு பழக்கப்படுத்தி, அவரை அடுத்த கட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவோம்என்றார்.

தர்ஜினி பெல்கன்ஸிற்கு விளையாடுவது அவரிற்கு மட்டும் நன்மை இல்லை, அவர் இலங்கை தேசிய அணிக்காக 10 வருடங்களிற்கு விளையாடியுள்ளார். சில காலங்களில் அணியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவ் அனுபவம் பெல்கன்ஸிற்கு பெரிதும் கைகொடுக்கும்.

தர்ஜினி 2011 உலக வலைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரில் சிறந்த சூட்டர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலைப்பந்தாட்ட சம்மேளனத்துள்ளான அரசியல் நிலமைகள் காரணமாக இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணிக்கு தர்ஜினி அண்மைக்காலமாக தெரிவுசெய்யப்படவில்லை.

அவர் தேசிய அணிக்கு மீண்டும் விளையாடுவதனை மிகவும் விரும்புகின்றார். அவ்வாறே, அவுஸ்திரேலியாவின் முதற்தர தொடரான சண்கோர்ப் சுப்பர் நெற்போல்(Suncorp Super Netball) தொடரிலும் விளையாடுவதற்கு ஆவலாகவுள்ளார்.

லின்ட் மற்றும் நிக்கோலி ஆகியோர் நான் அவர்களது கழகத்திற்கு(பெல்கன்ஸ்) விளையாடுவதனை விரும்பினர். எனக்கும் என்னை முன்னேற்றுவதில் விருப்பம் இருந்தது. ஆகவே, சம்மதம் தெரிவித்துவிட்டேன்என்றார் தர்ஜினி.

நான் எப்போதும் வலைப்பந்து விளையாடுவதையும், நட்பு வட்டத்தினை விஸ்தரித்துக்கொள்வதையும் விரும்புகின்றேன்.”

அவுஸ்திரேலியாவில் இருப்பது நன்றாகவிருக்கின்றது. நல்ல மனிதர்கள் நிறையவே இருக்கின்றனர்என தொடர்ந்தும் கருத்திடுகையில் குறிப்பிட்டார் தர்ஜினி.

வலைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின்..

2012இல் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிற்கு எற்கனவே சென்றிருந்த தர்ஜினி, தற்போது அவுஸ்திரேலியா சென்றிருப்பது இரண்டாவது தடவையாகும்.

லின்ட், தர்ஜினிக்கு ஆரம்பகாலத்தில் அவுஸ்திரேலியாவில் இவ்வாறான வாய்ப்பினை ஏற்படுத்த முடியவில்லை என்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார். “அவரை 10 அல்லது 15 வருடங்களிற்கு முன் எவரும் கண்டுகொள்ளவில்லை, அவர் றொமெல்டா ஏய்க்கென் போன்று உருவாகியிருக்க வேண்டியவர்என்றார்.

தர்ஜினியை 35 வயதில் அறிமுகம் பெற்றதற்குப் பதிலாக 24 வயதில் யாராயினும் அறிமுகப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தர்ஜினி மிகவும் வெட்கமான மனப்பாங்கினைக் கொண்டவர். தேசிய அணியில் விளையாடுவதற்கு ஆரம்பித்ததன் பின்னரே அவர் ஏனையோருடன் பழகுவதற்கு ஆரம்பித்திருந்தார்.

தனது திறனை மேம்படுத்திக்கொண்டு இலங்கை தேசிய அணிக்கு சேவையாற்றுவதற்காகவும், அவரது எதிர்காலம் சிறப்பானதாக அமையவும் Thepapare.comஇன் வாழ்த்துக்கள்!

மூலம்: http://www.starweekly.com.au

>> மேலும் பல செய்திகளைப படிக்க <<