ஸ்மித்தின் அபாரத்தினால் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி.

60

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதமடித்து கைகொடுக்க அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

அவஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்குமிடை யில் கடந்த 3ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து!

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து….

இந்த நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று (05) கென்பராவில் உள்ள மனுக்கா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துடன், அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருந்து

இதில் பக்கர் சமான் (2), ஹாரிஸ் சொஹைல் (6), மொஹமட் ரிஸ்வான் (14) மற்றும் ஆசிப் அலி (4) ஆகியோர் சொற்ப ஓட்டங்களை எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

எனினும், அணித் தலைவர் பாபர் அசாம் (50) மற்றும் இப்திகார் அஹமட்டின் (62) அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

இதில் அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில் அஸ்டன் அகார் 2 விக்கெட்டுக்களையும்கேன் ரிச்சர்ட்சன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி முதல் விக்கெட்டுக்காக 30 ஓட்டங்களை எடுத்தது

இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்தி தொடர்நாயகன் விருது வென்ற டேவிட் வோர்னர் 20 ஒட்டங்களுளை எடுத்து ஆட்டமிழக்க, ஆரோன் பின்ச் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்

எனினும், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களுடனும் (51 பந்து, 11 பௌண்டரி, ஒரு சிக்ஸர்), அஷ்டன் டர்னர் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து!

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து….

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் இர்பான், இமாட் வசீம் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3ஆவதும், இறுதியுமான டி-20 போட்டி எதிர்வரும் 8ஆம் திகதி பேர்த்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 150/6 (20) இப்திகார் அஹமட் 62, பாபர் அசாம் 50, அஸ்டன் அகார் 23/2

அவுஸ்திரேலியா – 151/3 (20) ஸ்டீவ் ஸ்மித் 80, மெக் மெக்டர்மோட் 21

முடிவு அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<