பிஃபா உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய குழாம் ஒன்றுடனேயே இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கியுள்ளது. இம்முறை உள்ள பெல்ஜியம் குழாத்தை அவர்களின் ‘பொற்கால தலைமுறை’ என்று அழைக்கின்றனர்.
உலகக் கிண்ண வரலாறு
1930 ஆம் ஆண்டு உருகுவேயில் நடந்த ஆரம்ப உலகக் கிண்ண போட்டிக்கு அழைக்கப்பட்ட 13 அணிகளில் ஒன்றான பெல்ஜியம் அந்த தொடரில் அமெரிக்கா மற்றும் பரகுவே அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் முறையே 3-0 மற்றும் 1-0 என தோல்வியுற்று தனது குழுவில் கடைசி இடத்தைப் பெற்றது.
2018 உலகக் கிண்ணம்: பிரான்ஸ் அணியின் முன்னோட்டம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கிண்ணத்தை..
ரஷ்யாவில் ஆரம்பமாகி இருக்கும் தொடர் அந்த அணி பங்கேற்கும் 13 ஆவது உலகக் கிண்ணமாகும். இதில் 1986 உலகக் கிண்ணத்தில் அந்த அணி 4 ஆவது இடத்தை பிடித்ததே பெல்ஜியத்தில் சிறந்த பெறுபேறாகும். அந்த தொடரில் குழு நிலை போட்டிகளில் மெக்சிகோ மற்றும் பரகுவேயுக்கு அடுத்து 3 ஆவது இடத்தை பிடித்த பெல்ஜியம் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று 16 அணிகள் சுற்றில் சோவியட் ஒன்றியத்தை எதிர்கொண்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் போட்டி மேலதிக நேரத்திற்கு சென்றது. அதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
மறுபுறம் டென்மார்க் அணியை 5-1 என தோற்கடித்த பலம்பெற்ற ஸ்பெயினை காலிறுதியில் எதிர்கொண்ட பெல்ஜியம் கடும் போட்டி கொடுத்து அந்நாட்டு ரசிகர்களை ஆசன நுணிக்கு இட்டுச் சென்றது. அந்தப் போட்டி 1-1 என சமநிலை பெற பெனால்டி முறையில் 5-4 என வெற்றி பெற்றது. தொடர்ந்து பெல்ஜியம் அணி அரையிறுதியில் அர்ஜன்டீனாவை எதிர்கொண்டதோடு அந்த போட்டியில் 2-0 என தோல்வியை சந்தித்தது.
பின்னர் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் அணி மேலதிக நேரத்தில் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து நான்காவது இடத்தை பிடித்தது. 1986 உலகக் கிண்ணத்தில் பெல்ஜியத்தின் என்சோ சைபோ சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றார்.
இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?
ஐரோப்பாவுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் H குழுவில் கிரேக்கம், பொஸ்னியா, ஹெர்சகோவினா, எஸ்தோனியா, சைப்ரஸ் மற்றும் ஜிப்ரால்டா அணிகளுடன் பெல்ஜியம் இடம்பெற்றிருந்தது. எதிர்பார்த்தது போல் பெல்ஜியம் தனது குழுவில் முதலிடத்தை பெற்று ரஷ்யாவுக்கு செல்ல நேரடி தகுதி பெற்றுக் கொண்டது. இதில் அந்த அணி 10 தகுதிகாண் போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று கிரேக்கத்துடனான போட்டியை மாத்திரம் 1-1 என சமன் செய்திருந்தது.
உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை
உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று ரஷ்யாவில்…
இந்த ஒன்பது வெற்றிகளில் எஸ்தோனியாவுக்கு எதிராக 8-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி, தொடர்ந்து 6-0 என வெற்றி, ஜிப்ரால்டாவுடன் 9-0 என வெற்றி ஆகிய மூன்று மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது. தனது குழுவில் இருக்கும் ஏனைய அனைத்து அணிகளை விடவும் உச்ச பலத்தை பெற்ற அணியாக இருந்த பெல்ஜியம், மொத்தம் 28 புள்ளிகளுடன் தனது குழுவில் எந்த நெருக்கடியும் இன்றி முதல் இடத்தை பிடித்தது. அந்த குழுவில் 19 புள்ளிகளுடன் கிரேக்கம் இரண்டாவது இடத்திற்கு வந்தது.
முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி
2016 ஐரோப்பிய கிண்ணத்தில் சோபிக்கத் தவறியதை அடுத்து மார்க் வில்மொட்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின் ரொபர்ட் மார்டினஸ் அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டது ரோயல் பெல்ஜியம் கால்பந்து சம்மேளனத்தின் அதிர்ச்சி தரும் முடிவாகவே இருந்தது.
44 வயதான மார்டினஸ் அதிகம் செல்வாக்கு மிக்க முகாமையாளராக இருக்கவில்லை என்பதோடு அதற்கு முன்னர் ப்ரீமியர் லீக் கழகங்களான ஸ்வான்சி, விகான் மற்றும் எவர்டன் அணிகளுக்கு மாத்திரமே முகாமையாளராக செயற்பட்டிருந்தார். விகான் கழகம் 2013 ஆம் ஆண்டு எப்.ஏ. கிண்ணத்தை வென்றதே அவரது சிறந்த அடைவாகும்.
எவ்வாறாயினும் அவரது உலகத் தரம் வாய்ந்த குழாம் மற்றும் சிறந்த உதவி முகாமையாளர் தியரி ஹென்றி ஆகியோருடன் ரஷ்யாவுக்கு பலம்மிக்க அணியுடன் களமிறங்குகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தியல்ல.
உலகக் கிண்ணத்தை வெற்றியின்றி ஆரம்பித்த பிரேசில்
பிஃபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில்…
ரொமலு லுகாகு முன்களத்திலும் அவருக்கு பின்னால் எடன் ஹசார்ட் மற்றும் கெவின் டி புருய்னே அல்லது கரஸ்கோவை கொண்ட 3-4-2-1 என்ற ஆட்ட பாணியையே பெல்ஜியம் முன்னெடுப்பதாக தெரிகிறது. இந்த ஆட்ட பாணி பெல்ஜியம் அணிக்கு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் கைகொடுத்ததோடு, மார்டினஸ் இதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது அல்லது ரஷ்யாவில் மாற்றங்கள் கொண்டுவருவது எதிரணியை பொறுத்ததாக இருக்கும்.
பலமும் பலவீனமும்
முன்னர் குறிப்பிட்டதுபோல் பெல்ஜியம் சிறந்த குழாத்தை கொண்டிருப்பதோடு இம்முறை உலகக் கிண்ணத்தில் சிறந்த குழாங்களில் ஒன்றாக இருப்பதில் விவாதம் இல்லை. இதில் செல்சியின் எடன் ஹசார்ட் மற்றும் திபவுட் கோர்டொயிஸ், மன்செஸ்டர் சிட்டியின் கெவின் டி ப்ருய்ன், மன்செஸ்டர் யுனைடெட்டின் ரொமலு லுகாகு அதேபோன்று மார்டினஸ் மற்றும் சரஸ்கோ போன்ற வீரர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்தால் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ள ஏனைய 31 அணிகளையும் வீழ்த்தும் திறன் பெல்ஜியத்திடம் உள்ளது.
பலரும் கூறுவது போல் பெல்ஜியம் கால்பந்து தனது பொற்கால தலைமுறையை கொண்டுள்ளது. அணித்தலைவர் எடன் ஹசார்ட் கூறும்போது, “நாம் யார் என்பது எமக்குத் தெரியும். நாம் சிறந்த வீரர்கள் என்பதோடு, இங்லாந்தில், இத்தாலியில், ஸ்பெயினில் பலம்கொண்ட அணிகளுடன் நாம் ஆடியிருக்கிறோம். நாம் பொற்கால தலைமுறையில் இருக்கிறோம், இப்போது நாம் வெற்றிபெற வேண்டிய நேரமாகும்” என்றார்.
2018 உலகக் கிண்ணம்: பிரேசில் அணியின் முன்னோட்டம்
பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி வந்ததும்..
பெல்ஜியம் அணியின் பலவீனம் என்று ஒன்றே ஒன்றை குறிப்பிட முடியுமானால், அது முகாமையாளர் பிஃபா உலகக் கிண்ண அனுபவம் பெற்றிருக்காதவர் என்பதை சுட்டிக்காட்டலாம். எனினும் தியரி ஹென்றி அவருக்கு பின்னணியில் இருக்கும் நிலையில் ரசிகர்கள் அது பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
முக்கிய வீரர்கள்
எடன் ஹசார்ட் நீண்ட காலமாக பெல்ஜியம் அணித்தலைவராக இருப்பதோடு தன்னை அணித்தலைவராக நிலைநிறுத்திக் கொண்டிருப்பவராவார். ஹசார்ட்டை பிரீமியர் லீக்கின் சிறந்த வீரர்களில் ஒருவராக பலரும் கருதும் நிலையில் ரஷ்யாவில் அவர் பிரகாசிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. எனினும் அவரது செல்சி அணி இந்த பருவத்தில் போதுமாக சோபிக்காத நிலையில் எப்.ஏ. கிண்ணத்தை கைப்பற்ற ஹசார்ட் முக்கிய பங்களிப்பு செய்தார்.
கெவின் டி ப்ருய்ன் பெல்ஜியம் அணியின் மற்றொரு உலகத் தரம் வாய்ந்த வீரர் ஆவார். பிரீமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்திய மன்செஸ்டர் சிட்டியில் அவருக்கு சிறப்பான பருவமாக இது இருந்தது. 2014 உலகக் கிண்ணத்தில் டி ப்ருய்ன் பெல்ஜியத்தின் சிறந்த வீரராக இருந்ததோடு இந்த ஆண்டும் அந்த இடத்தை அவர் பிடிப்பார் என்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பெல்ஜியம் உலகின் சிறந்த கோல்காப்பளர்களில் ஒருவரான திபவுட் கோர்டொயிஸை தன்னகத்தே கொண்டுள்ளது. யுனைடெட்டுக்கு எதிரான எப்.ஏ. கிண்ண இறுதிப் போட்டியில் அவர் செல்சி அணிக்காக பல கோல்களையும் அபாரமாக தடுத்தார். கோர்டொயிஸுக்கு இது சிறந்த உலகக் கிண்ணமாக அமைந்தால், அது பெல்ஜியம் அணிக்கு அதிக பலம் சேர்க்கும்.
பார்க்க வேண்டியது
தோமஸ் மியுனியர் மற்றும் மிச்சி பட்சுவயி ஆகிய இரு வீரர்களும் அவதானத்திற்குரியவர்கள். மியுனியர் அண்மைக் காலத்தில் பெல்ஜியத்தில் திறமை மிக்க பின்கள வீரராக மாறியிருப்பதோடு, லுகாகுவிற்கு அடுத்த இரண்டாவது வீரராக வர பட்சுவயிக்கு வாய்ப்பு உள்ளது. காயத்திற்கு முன்னர் பட்சுவயி தனது டொர்ட்முன்ட் கழகத்திற்காக அதிரடி கோல்களை புகுத்தியிருந்தார்.
இம்முறை உலகக் கிண்ணத்தில் பட்சுவயி பயன்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அவர் திறமையை வெளிக்காட்டுவார் என்று நம்பலாம்.
இறுதிக் குழாம்
கோல்காப்பாளர்கள்
கொயேன் கஸ்டீல்ஸ், திபவுட் கோர்டொயிஸ், சிமன் மிக்னொலட்
பின்கள வீரர்கள்
டொபி அல்டெர்வயல்ட், டெட்ரிக் பொயாடா, வின்சன்ட் கொம்பனி, தோமஸ் மியுனியர், தோமஸ் வெர்மேலன், ஜான் வெர்டோன்கன்
மத்தியகள வீரர்கள்
யன்னிக் கரஸ்கோ, கெவின் டி ப்ருய்ன், மூசா டெம்பலே, லீன்டர் டென்டொன்கர், மரௌன் பெல்லைனி, எடன் ஹவார்ட், தோர்கன் ஹசார்ட், அத்னான் ஜனுசாஜ், ட்ரீஸ் மெர்டன்ஸ், யூரி டிலமன்ஸ், அக்செல் விட்சல்
முன்கள வீரர்கள்
மிச்சி பட்சுவயி, நகர் சட்லி, ரொமலு லுகாகு
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<