அடி பாதாளத்திற்குச் சென்றது பாகிஸ்தான்

10621
Pakistan plummets to No 9 in ICC ODI ranking with lowest points tally since 2001

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து நான்கு போட்டிகளை வென்று 4-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வயிட் வோஷைத் தவிர்த்தது.

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் 87 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்தத் தொடரை 1-4 என இழந்ததால் ஒரு புள்ளி சரிந்து 86 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஐ.சி.சி. தரவரிசையை 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதில் இருந்து பாகிஸ்தான் தரவரிசையில் இவ்வளவு மோசமான நிலைமைக்குச் சென்றது கிடையாது. முதன்முறையாக 86 புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. 9-வது இடத்தில் இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ண தொடருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் தன்னிச்சையாக உலகக் கிண்ண போட்டிகளுக்குத் தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடிய பின்னரே உலகக் கிண்ண போட்டிகளின் முதன்மை சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான் 8-வது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியை விட 8 புள்ளிகள் பின் தங்கியுள்ளது. பாகிஸ்தான் அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக செயற்பட்டு அதிக அளவு புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்திற்குள் நுழைந்தால் நேரடியாக உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறும்.

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 4-1 என அவுஸ்திரேலியா கைப்பற்றியதால் அவுஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 110 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், தென்ஆபிரிக்கா 113 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன.


செப்டம்பர் 4ஆம் திகதி வெளியான ஒருநாள் அணிகளின் தரவரிசை

  1. அவுஸ்திரேலியா – 124 புள்ளிகள்
  2. நியூசிலாந்து – 113 புள்ளிகள்
  3. இந்தியா – 110 புள்ளிகள்
  4. தென் ஆபிரிக்கா – 110 புள்ளிகள்
  5. இங்கிலாந்து – 107 புள்ளிகள்
  6. இலங்கை – 101 புள்ளிகள்
  7. பங்களாதேஷ் – 98 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 94 புள்ளிகள்
  9. பாகிஸ்தான் – 86 புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 49 புள்ளிகள்
  11. சிம்பாப்வே – 46 புள்ளிகள்
  12. அயர்லாந்து – 43 புள்ளிகள்

ஆகஸ்ட் 27ஆம் திகதி வெளியான டி20 அணிகளின் தரவரிசை

  1. நியூசிலாந்து – 132 புள்ளிகள்
  2. இந்தியா – 126 புள்ளிகள்
  3. மேற்கிந்திய தீவுகள் – 125 புள்ளிகள்
  4. தென் ஆபிரிக்கா – 119 புள்ளிகள்
  5. இங்கிலாந்து – 116 புள்ளிகள்
  6. அவுஸ்திரேலியா – 110 புள்ளிகள்
  7. பாகிஸ்தான்  – 104 புள்ளிகள்
  8. இலங்கை – 96 புள்ளிகள்
  9. ஆப்கானிஸ்தான் – 78 புள்ளிகள்
  10. பங்களாதேஷ் – 74 புள்ளிகள்
  11. நெதர்லாந்து – 67 புள்ளிகள்
  12. சிம்பாப்வே  – 62 புள்ளிகள்
  13. ஸ்காட்லாந்து – 57 புள்ளிகள்
  14. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – 54 புள்ளிகள்
  15. அயர்லாந்து – 48 புள்ளிகள்
  16. ஓமான் – 37 புள்ளிகள்
  17. ஹொங் கொங் – 29 புள்ளிகள்

ஆகஸ்ட் 30ஆம் திகதி வெளியான டெஸ்ட்  அணிகளின் தரவரிசை

  1. பாகிஸ்தான் – 111 புள்ளிகள்
  2. இந்தியா – 110 புள்ளிகள்
  3. அவுஸ்திரேலியா – 108 புள்ளிகள்
  4. இங்கிலாந்து – 108 புள்ளிகள்
  5. தென் ஆபிரிக்கா – 96 புள்ளிகள்
  6. இலங்கை – 95 புள்ளிகள்
  7. நியூசிலாந்து – 95 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 67 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 57 புள்ளிகள்
  10. சிம்பாப்வே – 08 புள்ளிகள்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்