அடுத்த மாதம்  இலங்கை கிரிக்கட்  அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை  4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளன.

இந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கு புள்ளிகளைப் பயன்படுத்தும் திட்டம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபையிடம் இம்மாத ஆரம்பத்தில் வேண்டுகோள்  விடுத்து இருந்தது. அதன் பின் அது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்து அதற்கு சம்மதம் வழங்கியது. இலங்கை கிரிக்கட் சபையின் சம்மதத்தின் பின் இங்கிலாந்து கிரிக்கெட் சபை பாகிஸ்தான்  கிரிக்கெட் சபைக்கும் அவர்களுக்கு எதிரான தொடரில்  வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கு புள்ளிகளைப் பயன்படுத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு  பாகிஸ்தான்  கிரிக்கெட் சபையும் சம்மதம் வழங்கியுள்ளது.

புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முறை பெண்கள் ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. அந்த முறையையே, இங்கும் பயன்படுத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை முயன்றுள்ளது.

இதன்படி, டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றிக்கு 4 புள்ளிகளும் (வெற்றி தோல்வியின்மைக்கு, இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள்) ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கும் தலா 2 புள்ளிகளும் வழங்கப்படும்.

இதன்படி, ஓர் அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றால், 12 புள்ளிகளைப் பெற, அத்தொடரில் காணப்படும் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஒன்றிலும் வெற்றிபெறும் அணியும், 12 புள்ளிகளையே பெறும்.

எனவே, ஒரு வகையான போட்டியில் மாத்திரம் சிறப்பான திறமைகளைக் கொண்ட அணி, தொடரை வெற்றிகொள்ள முடியாது போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்