இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரின் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய அணி வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயிற்சிகளை ஆரம்பித்த முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கின்றது.
T20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொள்ளாது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா?
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2ஆவது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள நான்காவது ஊரடங்கு முடிவடைவதற்கு முன், வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் வீரர்கள் இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ், மும்பை நகருக்கு வெளியில் உள்ள கான்சோலி ரிலையன்ஸ் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மும்பையில் வசித்துவரும் அணித் தலைவர் ரோஹித் சர்மா, சகலதுறை வீரர்களான ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ், ஆதித்யா தாரே மற்றும் வேகப் பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி ஆகியோருக்கு இந்த பயிற்சி முகாமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மும்பை அணி நிர்வாகம் எந்தவொரு வீரரையும் பயிற்சிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இரண்டரை மாதங்களுக்கு பிறகு பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பான அனுபவம் என்றும், அதற்காக தான் காத்திருப்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை மாதங்களாக தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வராத தனக்கு, மீண்டும் துடுப்பு மட்டையைப் பிடித்து விளையாடுவது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த முகாமில் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆனால் பிசிசிஐ–யின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு அனுமதி அளித்ததும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது.
டெஸ்ட் போட்டிகளின் தரத்தை உயர்த்த சச்சின் கூறும் ஆலோசனை!
அந்தப் பின்னணியில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இவ்வாறு களப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேநேரம், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் பிசிசிஐக்கு அறிவிக்காமல் களப் பயிற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பின்னணியில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க