கிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 27

1195
OTD-Sep-27

1973ஆம் ஆண்டுபுலஸ்தி குணரத்ன பிறப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் புலஸ்தி குணரத்னவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : புலஸ்தி வருன குணரத்ன

பிறப்பு : 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி

பிறந்த இடம் : கொழும்பு

வயது : 43

விளையாடிய காலப்பகுதி : 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு  வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்

பந்துவீச்சு பாணி : வலதுகை வேகப்பந்து வீச்சு

விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 23

கைப்பற்றிய ஒருநாள் விக்கெட்டுகள் – 27

சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 44/4

ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 33.62

புலஸ்தி குணரத்ன 86 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 22.44 என்ற பந்து வீச்சு சராசரியில் 242 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


1981ஆம் ஆண்டுப்ரெண்டன் மெக்கலம் பிறப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மற்றும் முன்னாள் தலைவரான ப்ரெண்டன் மெக்கலமின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – ப்ரெண்டன் பெரி மெக்கலம்

பிறப்பு – 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி

பிறந்த இடம்டனிடின், ஒடாகோ

விளையாடிய காலப்பகுதி – 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணிவலதுகை துடுப்பாட்டம்

களத்தடுப்பு இடம்விக்கெட் காப்பாளர்

உறவுகள்ஸ்டூவரட் மெக்கலம் (தந்தை), நேதன் மெக்கலம் (மூத்த சகோதரர்)

விளையாடிய அணிகள்நியூசிலாந்து, பிரிஸ்பேன் ஹீட், கேன்டர்பரி, சென்னை சூப்பர் கிங்ஸ், கிலாமோர்கன், குஜராத் லயன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நியூ சவுத் வேல்ஸ், ஒடாகோ, சசெக்ஸ், ட்ரிபேகோ நைட் ரைடர்ஸ், வார்விக்ஷயர்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 260

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 6083

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 166

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 30.41

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 101

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 6453

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 302

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 38.64

விளையாடியுள்ள சர்வதேச டி20 போட்டிகள் – 71

மொத்த சர்வதேச டி20 ஓட்டங்கள் – 2140

அதிகபட்ச சர்வதேச டி20 ஓட்டம் – 123

சர்வதேச டி20 துடுப்பாட்ட சராசரி – 35.66

ப்ரெண்டன் மெக்கலம் தான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 54 பந்துகளில் சதம் விளாசி 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய  தீவுகள் அணியின் விவ் ரிச்சர்ட்ஸும், 2014ஆம் ஆண்டு  அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக்கும் 56 பந்துகளில் சதம் எடுத்ததே வேகமான டெஸ்ட் சதங்களாக இருந்தன. அதைத் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ப்ரெண்டன் மெக்கலம் முறியடித்து இருந்தார்.  தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் 79 பந்துகளில், 21 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 145 ஓட்டங்களை விளாசிய நிலையில் ஆட்டம் இழந்து இருந்தார்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 26

பெஸ் என்ற புனைப் பெயரைக் கொண்ட ப்ரெண்டன் மெக்கலம் விக்கெட் காப்பாளராக செயற்பட்டு 101 டெஸ்ட் போட்டிகளில் 198 பிடியெடுப்பு மற்றும் 11 ஸ்டம்பிங்கையும், 260 ஒருநாள் போட்டிகளில் 262 பிடியெடுப்பு மற்றும் 15 ஸ்டம்பிங்களை செய்துள்ளதோடு 71 சர்வதேச டி20 போட்டிகளில் 36 பிடியெடுப்பு மற்றும் 8 ஸ்டம்பிங் முறைகளை செய்துள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1972ஆம் ஆண்டுமால் லோய் (இங்கிலாந்து)
  • 1974ஆம் ஆண்டுபங்கஜ் தர்மாணி (இந்தியா)
  • 1981ஆம் ஆண்டுலட்சுமிபதி பாலாஜி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்