வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 21

314
BANGLADESH CRICKET

2015ஆம் ஆண்டுஇந்தியாவுக்கு தொடர் தோல்வி

இந்திய அணி பங்களாதேஷ் மண்ணில் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின்  முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் தொடர் தோல்வியைத் தவிர்க்கும் நோக்கில் 2ஆவது போட்டியை சந்தித்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 200 ஓட்டங்களுக்கு சுருண்டது.  பின் பங்களாதேஷ் அணி வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போது மழை பெய்தமையால் பங்களாதேஷ் அணிக்கு 47 ஓவர்களில் 200 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அணியும் அந்த சவாலை எதிர்கொண்டு 38 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து போட்டியை வெற்றிகொண்டு போட்டித்தொடரைக் கைப்பற்றியது.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 20

2009ஆம் ஆண்டுபாகிஸ்தான் டி20 சம்பியனானது

2009ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது  டி20 உலக கிண்ணத்தை பாகிஸ்தான் தன் வசப்படுத்தியது. இப்போட்டியில்  பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  இலங்கை  அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 138 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் 18.4 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி டி20 சம்பியனானது.

வரலாற்றில் ஜூன் மாதம் 19

1975அம் ஆண்டு – 1ஆவது உலகக் கிண்ண சம்பியன்

உலக கிரிக்கட் வரலாற்றிலே 1ஆவது உலகக் கிண்ணம் 1975ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானம் செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய  மேற்கிந்திய தீவுகள் அணி 60 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 291 ஓட்டங்களைப் பெற்றது. அதில் தலைவர் கிளைவ் லொயிட் 102 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  அவுஸ்திரேலிய அணி 58.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம்  மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்டங்களால் இந்த இறுதிப் போட்டியை வெற்ற கொண்டு 1ஆவது உலகக் கிண்ணத்தை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது.

ஜூன் மாதம் 21ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1922 ஜிம் மெக்கொணன்   (இங்கிலாந்து)
  • 1929 ஆகா சாதத் அலி (பாகிஸ்தான்)
  • 1938 ஜெகி  பொட்டன்  (தென் ஆபிரிக்கா)
  • 1949 டெனிஸ் ஸ்ட்ரீக் (சிம்பாப்வே)
  • 1955 ஹெலன் ஸ்லொதர்  (இங்கிலாந்து)
  • 1966 நசீர் ஜாவேத் (அமெரிக்கா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்