திலக் பீரிஸ் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஒல்ட் பென்ஸ், கேகாலை வெடரென்ஸ் அணிகள்

161
Veterans Football final preview

எட்டாவது தடவையாக இடம்பெறும் முன்னாள் கால்பந்து வீரர்களுக்கான திலக் பீரிஸ் சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பினை ஓல்ட் பென்ஸ் வெடெரென்ஸ் விளையாட்டுக் கழகமும், கேகாலை வெடெரன்ஸ் விளையாட்டுக் கழகமும் பெற்றிருக்கின்றன.

இந்த கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நாளை (27) வெள்ளவத்தையில் அமைந்திருக்கும் கூரே பார்க் மைதானத்தில் பி.ப. 3.30 மணியளவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மாஸ்டர்ஸ் கால்பந்து சங்கத்தினால் (SLSMA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கால்பந்து தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 44 கால்பந்து கழகங்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கால்பந்து தொடரில் பங்கெடுக்கும் முன்னாள் வீரர்களுக்கு அவர்களது பயணச் செலவுகளை குறைக்கும் நோக்கோடு தொடரின் போட்டிகள் கொழும்பிலும் வீரர்களுக்கு வசதியான ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரையிறுதி மோதலில் புனித பத்திரிசியார், புனித பேதுரு கல்லூரிகள்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் …

கொழும்பில் இடம்பெற்றிருந்த இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் ஒல்ட் பென்ஸ் வெடரென்ஸ் கழகம் கொழும்பு வெடெரென்ஸ் கழகத்தினை வீழ்த்தியிருந்ததோடு, அரையிறுதிப் போட்டியில் மாளிகாவத்தை வெடரென்ஸ் கழகத்தினை 2-0 என்ற (பெனால்டி முறையில்) கோல்கள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது.

மறுமுனையில் கொழும்பை தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற இத்தொடரின் ஏனைய காலிறுதிப் போட்டியில் திருகோணமலை மாஸ்டர்ஸ் கால்பந்து கழகத்தினையும், அரையிறுதியில் பதுளை வெடரென்ஸ் கால்பந்து கழகத்தினையும் வீழ்த்தி கேகாலை வெடரென்ஸ் கழகம் இறுதிப் போட்டி வாய்ப்பினை பெற்றுக் கொண்டது. தீர்மானமிக்க இந்த இரண்டு போட்டிகளிலும் கேகாலை வெடரென்ஸ் கழகம் எதிரணிகளை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கால்பந்து தொடரில் விளையாடிய வீரர்களில் பலர் இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்களின் முக்கிய வீரர்களாக ஏற்கனவே காணப்பட்டிருந்ததோடு, தேசிய அணிக்காகவும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியின் வெற்றியாளராக மாறும் அணிக்கு திலக் பீரிஸ் சவால் கிண்ணத்தோடு சேர்த்து ரூபா 100,000 பணப்பரிசும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்ளும் அணிக்கு இரண்டாம் இடத்திற்கான கிண்ணத்தோடு ரூபா 50,000 பணப்பரிசும் வழங்கப்படவிருக்கின்றது.

இத்தோடு தொடரில் பெறுமதிமிக்க வீரர், பெறுமதிமிக்க கோல் காப்பாளர் ஆகியோருக்கும் தலா ரூபா 10,000 வீதம் பணப்பரிசு வழங்கப்படவிருக்கின்றது.

தொடரை நடாத்துகின்ற இலங்கை மாஸ்டர்ஸ் கால்பந்து சங்கம் 1995 ஆம் ஆண்டு திலக் பீரிஸ் அவர்களினால் உருவாக்கப்பட்டிருந்தது. தேசிய ரீதியில் கால்பந்து விளையாட்டுக்கு பங்களிப்புச் செய்த முன்னாள் வீரர்களுக்கு உதவிகள் செய்வது இந்த சங்கத்தின் நோக்கமாகும்.

அரையிறுதிக்குள் முதலில் நுழைந்த புனித ஜோசப், ஸாஹிரா அணிகள்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் …

கடந்த 22 வருடங்களாக இச்சங்கம் நாடுபூராகவும் காணப்படும் தேவைகள் கொண்ட முன்னாள் கால்பந்து வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் பங்குபெறும் இரு அணிகளதும் குழாம்

ஒல்ட் பென்ஸ் வெடரென்ஸ்

ஜோன்சன் (தலைவர்), S. பிரியன்த, சமந்த பெர்னாந்து, செஸ்டன் பெர்னாந்து, பிரதீப் நிசாந்த, S. பாலேந்திரன், ரவி அல்போன்சோ, தினேஷ் மனியுலா, சிசிர பெர்னாந்து, பசில் பெர்னாந்து, சஜித் கோமெஸ், ரோஷான் ரமீஸ், சிசிர பெரேரா, A.T. கிரிஷானோ, ஜுட் பெரேரா, நிசந்த பெர்னாந்து, A.B. நதார், சம்பத் பெரேரா, A.R.C. வல்லேஸ், B.M.S. ரணசிங்க

கேகாலை வெடரென்ஸ்

S.S.M. பர்ஹான், T.H.D.L அணில், M.A.N. சாமில், S. மாவேல, S. சிதாத் குமார, S. ஜயசிங்க, J.M. ரஷாக் (தலைவர்), M.N. மொஹமட், A.U.K. ரணசிங்க, R.A.G.R. ரணசிங்க, K. ஜயசிங்க, M.A.N. கியாஸ், T.C.I. காஸிம், B.M. சுதத், A.M. செனவிரத்ன, A. ஜயந்த