அவுஸ்திரேலிய தொடரிலிருந்து வெளியேறும் நுவன் துஷார

991

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கை T20 குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜப்னா!

நுவன் துஷார, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் மூன்றாவது போட்டியின் போது உபாதைக்கு ஆளாகியிருந்தார். நுவன் துஷாரவிற்கு இந்த உபாதை குணமாகாத நிலையிலேயே அவர் தற்போது, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்கெடுக்கும், T20 தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடுவது தடைப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் நுவன் துஷார இலங்கை அணியின், அவுஸ்திரேலிய தொடரை அடுத்து இந்திய அணியுடன் விளையாடவுள்ள T20 போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான வனிந்து ஹஸரங்க, சுகமடைந்து வரும் நிலையில் அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜப்னா!

அத்தோடு விரல் உபாதைக்கு ஆளான சுழல்பந்து சகலதுறை வீரரான ரமேஷ் மெண்டிசும் தனது உபாதையில் இருந்து குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரை அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், தொடரின் நான்காவது போட்டி நாளை (18) மெல்பர்ன் நகரில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<