எக்ஸ்போ லங்கா அணிக்கு இலகு வெற்றி

158
Vishawa Chathuranga

பெயார் அண்ட் லவ்லி அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B கிரிக்கெட் தொடரில் CDB பினான்ஸ் PLC அணியை சொற்ப ஓட்டங்களுக்கு சுருட்டிய எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.

கட்டுநாயக்க, மேரியன்ஸ் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற எக்ஸ்போ லங்காக முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய CDB பினான்ஸ் ஆரம்பம் தொட்டே மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்த…

வேகப்பந்து வீச்சாளரான மதுர லக்மால் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு நிரஞ்சன் வன்னியாரச்சி மற்றும் சச்சித் லக்ஷான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் CDB பினான்ஸ் அணி 28.2 ஓவர்களில் 83 ஓட்டங்களுக்கே சுருண்டது. அந்த அணியின் இடது கைது துடுப்பாட்ட வீரரான தனுஷ்க தர்மசிறி பெற்ற 28 ஓட்டங்களுமே அதிகமாகும்.

இந்நிலையில் பதிலெடுத்தாட கலமிறங்கிய எக்ஸ்போ லங்கா எந்த நெருக்கடியும் இன்றி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. சிறப்பாக ஆடிய விஷ்வ சதுரங்க ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

CDB பினான்ஸ் PLC – 83 (28.2) – தனுஷ்க தர்மசிறி 28, மதுர லக்மால் 3/35, நிரஞ்சன் வன்னியாரச்சி 2/13, சச்சித் லக்ஷான் 2/13

எக்ஸ்போ லங்கா – 85/3 (14) – விஷ்வ சதுரங்க 49*, முதுஷன் ரவிச்சந்திரகுமார் 2/16

முடிவு எக்ஸ்போ லங்கா 7 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<