இம்மாதம் ஆரம்பமாகும் 88வது சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்

112

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 88வது தடவையாக நடைபெறவுள்ள சேர். ஜோன் டாபர்ட் (சிரேஷ்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு, சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின், முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி, தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

மிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை …

பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்முறை சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அகில இலங்கை ரீதியில் உள்ள 15,000 பாடசாலை வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டில் நடைபெற்று வரும் பழமையான மெய்வல்லுனர் போட்டிகளில் ஒன்றாக சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் போட்டிகள் விளங்குவதுடன், நாடுபூராகவும் உள்ள முன்னணி மெய்வல்லுனர்களை இனங்காணுவதற்கும் இந்த தொடர் பெரும் உதவியாக இருந்துவந்துள்ளது.  

இம்முறை சிரேஷ்ட மெய்வல்லுனர்களுக்கான போட்டிகளுடன் ஆரம்பமாகும், சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் தொடர் எதிர்வரும் 19ம் திகதி முதல் 21ம் திகதிவரை கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சிரேஷ்ட பிரிவைச் சேர்ந்த 20, 18 மற்றும் 16 வயதுப் பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. பின்னர் கனிஷ்ட பிரிவுகளுக்கான மாகாண மட்டத்திலிருந்து தெரிவாகிய மெய்வல்லுனர்களுக்கான போட்டிகள் (14,13 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மெய்வல்லுனர்கள்) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளன.

ஆரம்பமாகவுள்ள சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், சி.பி.எல். (CBL) உணவுகள் சர்வதேச தனியார் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் நிலுபுல் டி சில்வா குறிப்பிடுகையில்,

“சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு மீண்டுமொருமுறை அனுசரணை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். அகில இலங்கை ரீதியில் உள்ள திறமைகளை வெளிக்கொணர்வதில் இந்த போட்டித் தொடர் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. அதனை ஊக்குவிப்பதற்கு நாம் எமது பங்களிப்பை வழங்குகிறோம். இதன்மூலம் வீரர்கள் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும்” என்றார்.

டயலொக் அனுசரணையில் இடம்பெறவுள்ள மகாவலி விளையாட்டு விழா

மகாவலி வலயங்களில் வாழ்கின்ற இளைஞர் …

அத்துடன், இம்முறை சிரேஷ்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் 6 மெய்வல்லுனர்களுக்கு ரிட்ஸ்பரி நிதிசார் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன்படி 18 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் சிறந்த மெய்வல்லுனர்களுக்கு அவர்களின் எதிர்கால விளையாட்டு முன்னேற்றங்களுக்காக தேவைப்படும் நிதிசார் உதவிகளை பிரத்தியேகமாக வழங்குவதாகவும் ரிட்ஸ்பரி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் உபாலி அமரதுங்க இத்தொடர் குறித்து குறிப்பிடுகையில்,

ரிட்ஸ்பரியின் தொடர்ச்சியான அனுரணையின் ஊடாக,சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் தரம் உயர்ந்துள்ளது. இதனை மெய்வல்லுனர்களிடமும் காணமுடிகின்றது. இதேவேளை இம்முறை சிறப்பாக செயற்படும் மெய்வல்லுனர்களுக்கு, நிதிசார் உதவிகளை வழங்குவதாக ரிட்ஸ்பரி தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான விடயங்கள் மெய்வல்லுனர்களை மேலும் வலுவாக்க உதவியாக இருக்கும்என்றார்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…