ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு தயாராக உள்ள இலங்கை பட்மிண்டன் அணி

80

இலங்கையினைச் சேர்ந்த நான்கு பட்மிண்டன் வீர வீராங்கனைகள் நெதர்லாந்து, செக் குடியரசு, பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறவுள்ள பட்மிண்டன் சுற்றுத்தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

உலக சக்கர நாற்காலி டென்னிஸில் இலங்கைக்கு ஆறாமிடம்

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை பட்மின்டண் அணியில் புவனேகா குணத்திலக்க, சச்சின் டயஸ் ஜோடியுடன் கவிதி சிரிமான்னகே மற்றும் ரன்துஷ்க குணத்திலக்க ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில், இலங்கை பட்மிண்டன் அணிக்குழுவின் தலைமைப் பயிற்சியாளராக பிரதிப் வெலககெதரவும், அணி முகாமையாளராக பாலித ஹெட்டியாரச்சியும் காணப்படுகின்றனர்.

இலங்கை பட்மிண்டன் அணி பங்கெடுக்கும் முதல் தொடராக நாளை (13) தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெறவுள்ள டச் ஒபன் தொடர் காணப்படுகின்றது. இதன் பின்னர், இலங்கை பட்மிண்டன் அணி செக் குடியரசில் எதிர்வரும் 21ஆம் தொடக்கம் 24ஆம் திகதி வரையில் நடைபெறும் செக் ஓபன் பட்மிண்டன் தொடரில் பங்கெடுக்கின்றது. இந்த தொடரினை அடுத்து பெல்ஜியம் ஓபன் பட்மிண்டன் தொடர் (ஒக்டோபர் 27-30) மற்றும் ஹங்கேரி ஓபன் பட்மிண்டன் தொடர் (நவம்பர் 03-07) என்பவற்றிலும் இலங்கை பட்மிண்டன் அணி பங்கேற்கின்றது.

இதேநேரம் இலங்கையின் திறமை வாய்ந்த பட்மிண்டன் வீரர்களான நிலுக கருணாரட்ன மற்றும் டினுக்க கருணாரட்னவும், ஐரோப்பிய நாடுகளில் பட்மிண்டன் தொடர்களில் பங்கேற்க எதிர்பார்க்கப்படுவதோடு, இதில் நிலுக்க கருணாரட்ன ஸ்பெயினில் இந்த டிசம்பரில் இடம்பெறவிருக்கும் பட்மிண்டன் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப்பில் முத்துமாலி சாதனை

இலங்கையில் இருந்து ஐரோப்பிய பட்மிண்டன் சுற்றுத்தொடருக்கு செல்லும் முன்னணி வீர வீராங்கனைகளான புவனேகா குணத்திலக்க மற்றும் சச்சின் டயஸ் ஆகியோருக்கு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சு பூரண அனுசரணை வழங்குவதோடு, ஏனைய வீர வீராங்கணைகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சும், இலங்கை பட்மிண்டன் சங்கமும் அனுசரணை வழங்குகின்றது.

இலங்கை பட்மிண்டன் அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ThePapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

>>மேலும் விளையாட்டு செய்திகளுக்கு<<