பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை 16 பேர் குழாம்

8018

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட இலங்கை குழாம் 16 பேராக குறைக்கப்பட்டிருக்கின்றது. 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக …..

அந்தவகையில், 22 பேர் அடங்கிய இலங்கை குழாத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, அமில அபொன்சோ, லஹிரு மதுசன்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றனர்.  

இதேநேரம், இந்த 22 பேர் அடங்கிய குழாத்திற்குள் உள்ளடக்கப்பட்ட ஏனைய வீரர்களில் ஒருவரான தசுன் ஷானக்க, பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் லசித் மாலிங்கவிற்கு பதிலாக இணைக்கப்பட்டிருக்கின்றார். 

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்ற காரணத்தினாலேயே தசுன் ஷானக்க இணைக்கப்டுகின்றார். அதேவேளை, 22 பேர் கொண்ட குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் ஐந்து வீரர்களும் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் போது தேவை எதுவும் ஏற்பட்டால் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தசுன் ஷானகவின் போராட்டம் வீணாக பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் ………

சகலதுறை அதிரடி வீரரான 27 வயது நிரம்பிய தசுன் ஷானக்க, பங்களாதேஷ் அணியுடன் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் வெறும் 63 பந்துகளுக்கு 86 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்து திறமையினை வெளிக்காட்டியிருந்தார். அதேநேரம், குறித்த போட்டியில் விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியதனை அடுத்து அவர்களுக்கு பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது. 

லசித் மாலிங்கவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும் பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. தொடர்ந்து, இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (28) மூன்றாவது போட்டி புதன்கிழமையும் (31) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த ஒருநாள் தொடரின் போட்டிகள் நடைபெறும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளதால், இலங்கை அணி தமது இறுதி 16 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தில் ஆறு வேகப் பந்துவீச்சாளர்களை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்களுக்கு எதிரான …….

இலங்கை அணி இதுவரையில் தமது சொந்த மண்ணில் வைத்து பங்களாதேஷ் அணியுடன் 19 ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்கின்றது. இதில் 15 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, 2 போட்டிகளில் மாத்திரமே பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இதேநேரம், 2 போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றன. 

கடைசியாக, 2017ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் அணி இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியிருந்தது. இந்த ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, ஷெஹான் ஜயசூரிய, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, வனிது ஹசரங்க, திசர பெரேரா, இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார, நுவன் பிரதீப், லசித் மாலிங்க (முதல் போட்டிக்கு மட்டும்),  தசுன் ஷானக்க (இந்த ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்),  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<