சதங்களை விளாசி நுவனிது, நிபுன் மற்றும் லசித் குரூஸ்புள்ளே

NSL Limited Overs Tournament 2024

45
NSL Limited Overs Tournament 2024

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் எட்டாம் நாள் ஆட்டத்தில் இன்று (20) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.

>>உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அதிரடி முன்னேற்றம்

கோல் எதிர் தம்புள்ளை

காலி, தம்புள்ளை அணிகள் மோதிய போட்டி கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆரம்ப வீரராக களமிறங்கிய லசித் குரூஸ்புள்ளேவின் அதிரடி சதத்தோடு தம்புள்ளை அணி 187 ஓட்டங்களால் (டக்வெத் லூயிஸ் முறையில்) கோல் அணியை வீழ்த்தியது. லசித் குரூஸ்புள்ளே 87 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களோடு 110 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் தம்புள்ளை அணியின் வெற்றியினை உறுதி செய்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தம்புள்ளை – 303/9 (48.4) லசித் குரூஸ்புள்ளே 110, துஷான் ஹேமன்த 65, முதித லக்ஷான் 46/3

 

கோல் – 108 (23.5) ரவிந்து ரசன்த 40, கசுன் ராஜித 42/4, லக்ஷான் சந்தகன் 9/2

 

முடிவு தம்புள்ளை 187 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)

கண்டி எதிர் கொழும்பு

கண்டி, கொழும்பு அணிகள் இடையில் நடைபெற்ற மோதலில் கொழும்பு அணி சார்பில் நுவனிது பெர்னாண்டோ (164), நிப்புன் தனன்ஞய (116) ஆகியோரது சதங்களோடு 5 ஓட்டங்களால் கண்டி அணியினை வீழ்த்தியது. கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் போராடிய சஹான் ஆராச்சிகே (120) மற்றும் அஹான் விக்ரமசிங்க (100) ஆகியோரும் சதம் விளாசிய நிலையில் அது வீணாகியது.

கொழும்பு – 325/5 (50) நுவனிது பெர்னாண்டோ 164, நிப்புன் தனன்ஞய 116, நிப்புன் ரன்சிக்க 60/4

 

கண்டி – 320 (49.5) சஹான் ஆராச்சிகே 120, அஹான் விக்ரமசிங்க 100, நுவனிது பெர்னாண்டோ 63/3

 

முடிவு கொழும்பு 05 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<