மஹேலவின் பார்வையில் இம்முறை ஐ.பி.எல் தொடர்

872
Mumbai indians Twitter

இம்முறை .பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மீண்டும் திரும்பியுள்ளதால் நடப்புச் சம்பியனாக கிண்ணத்தை தக்கவைப்பது தமக்கு கடினம் எனவும், இம்முறை .பி.எல் தொடரில் தமது அணி கடினமாக சவால்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  

மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக.. இந்திய கிரிக்கெட் …

11ஆவது .பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை மும்பையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முன்னாள் சம்பியனும், 2 ஆண்டுகள் போட்டித் தடைக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கவுள்ள தரப்பினருமான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவானுமான மஹேல ஜயவர்தன மற்றும் அதன் தலைவர் ரோஹித் சர்மா பங்கேற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று(06) மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மஹேல கருத்து வெளியிடுகையில்,

”கடந்த வருடம் நாம் சம்பியனாக முடிசூடிக் கொண்டாலும், இம்முறை போட்டித் தொடரில் அதனை மீண்டும் தக்கவைத்துக்கொள்வது கடினம் என்றே சொல்லாம். எந்த அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதை ஊகித்துக் கூற முடியாது உள்ளது.

அதிலும், இம்முறை போட்டித் தொடரில் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்ததாக களமிறங்கவுள்ளது. எனவே, போட்டித் தொடரை வெல்வதற்கு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளில் பல புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, அந்த அணிகளுடன் விளையாடுவது மிகப் பெரிய சவாலாக அமையும். நாம் இறுதிப் போட்டிக்காக திட்டங்களை மேற்கொண்டாலும், தற்போது எவ்வாறு முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அவ்வாறுதான் நாம் இப்போட்டித் தொடரில் முன்னே செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டையும் வெகுவிமர்சையாக அலங்கரிக்கும் ஐ.பி.எல். தொடர்

இந்தியாவோடு சேர்த்து உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கோடை காலத்தில் …

இதேநேரம், சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த இரு அணிகளும் .பி.எல் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது. ராஜஸ்தான் ரோயல் அணிதான் அங்குரார்ப்பண .பி.எல் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது. எனினும், அந்த அணிக்காக விளையாடிய பல அனுபவமிக்க வீரர்கள் தற்போது இல்லை. அதிலும் குறிப்பாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ளையாடுவது எமக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும், என்று மஹேல ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை .பி.எல் தொடரில் டி.ஆர்.எஸ் முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பாதி தொடரின்போது, இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை எனில், அடுத்த அணி அவ்வீரரை ஏலத்தில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முடிவுகளையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து மஹேல கருத்து வெளியிடுகையில்ஐபிஎல் அணிகள் புதுமையான வகையில் முன்னேற இந்த முறைகள் பரிணாமமாக அமையவுள்ளது. இது ஒரு சிறந்த மாற்றுவழி. ஒரு தொடரில் பாதியில் அணிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள அருமையான வாய்ப்பாகும்.   

சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பாதி தொடரின்போது, இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை எனில், அடுத்த அணி அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருப்பது மிகவும் நல்லது. இவை அனைத்தும் வீரர்களை அணிகள் பெறுவது அல்லது வெளியேற்றுவதை சார்ந்தது.

தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்யாமல் இருக்க ஸ்மித் முடிவு

தம்மீது சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு ஓர் ஆண்டு தடை விதித்த …

அத்துடன், டி.ஆர்.எஸ் முறைமை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது .பி.எல் தொடரிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தவறுகள் நடப்பதுதான், டி.ஆர்.எஸ் அதற்கு உதவியாக இருக்கும். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதை எப்படி கையாள வேண்டும் என்பது சர்வதேச வீரர்களுக்கு தெரியும். இளம் வீரர்களுக்கு கற்றுக் கொள்ளும் சிறந்த அனுபவமாக இருக்கும்என்றார்.

இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைர் ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், மஹேல கூறியது போல் நாங்கள்தான் சம்பியன் பட்டத்தை வெல்ல சாதகமான அணி என்ற நிலையில் களமிறங்க வேண்டியதில்லை. ஏனைய அணிகளுடன் சம அளவில் உள்ள அணி என்றே தொடருக்குள் நுழைய விரும்புகிறோம். தொடரை வெல்ல என்ன வேண்டுமோ அது எங்களிடம் இருக்கிறது.

.பி.எல் தொடரின் நடப்புச் சம்பியன் என்ற அடையாளம் அழுத்தம் ஏற்படுத்துவதாக நான் பார்க்க மாட்டேன். மாறாக, அது பொறுப்புடைமை. ஆம், நாங்கள் கடந்த .பி.எல் தொடரில் சம்பியன். அதை நினைத்து பெருமைப்படுகிறோம். இப்போது சரியான அணிச் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எமது அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால், கடந்த வருடம் மாலிங்க போர்மில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு பொறுப்பைச் சுமந்தார். அதிலும் கடந்த ஆண்டு மாலிங்கவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் மிட்செல் ஜொன்சன், மிட்செல் மெக்லினெகன் ஆகியோரை மாற்றி மாற்றி பயன்படுத்தினோம். இந்த ஆண்டு பும்ரா மீது அதிக அழுத்தம் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.  

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…