தென்னாபிரிக்கா அணியில் நான் ஒதுக்கப்பட்டேன் – மகாயா நிடினி

229
Makhaya Ntini
Getty Image

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்காக 1998ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை விளையாடிய அந்த அணியின் முதலாவது கருப்பின வேகப் பந்துவீச்சாளரான மகாயா நிடினி, தான் விளையாடிய காலப்பகுதியில் அணியில் இடம்பிடித்த சக வீரர்களே தன்னிடம் இனவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டதை தற்போது வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார். 

3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தை வென்ற டி வில்லியர்ஸின் ஈகல்ஸ்

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மூன்று அணிகள் மோதும்

கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம் என்ற இயக்கத்திற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர் மகாயா நிடினியும் ஒருவர்

43 வயதான நிடினி தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கருப்பின வீரர் ஆவார். இலங்கை அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறை களமிறங்கிய வேகப் பந்துவீச்சாளரான நிடினி, இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 390 விக்கெட்டுகளையும், 173 ஒருநாள் போட்டிகளில் 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  

இந்த நிலையில், 1998ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய அவர் சக வீரர்களே தன்னிடம் இனவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டதை முதல்முறையாக தெரிவித்துள்ளார்.   

ஜெக் கலிஸ், ஷோன் பொல்லாக், டொனால்ட், லான்ஸ் குளுஸ்னர், கிரேம் ஸ்மித், ஹர்ஷெல் கிப்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடியவரான நிடினி அண்மையில் அளித்த ஒரு பேட்டியில்

”எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எப்போதும் தனிமையையே உணர்ந்தேன். இரவு சாப்பாட்டுக்கு போகலாம் என்று எந்த வீரரும் எனது அறைக்கு வந்து அழைக்கமாட்டார்கள். இத்தனைக்கும் என் முன்னால் தான் திட்டம் போடுவார்கள் 

ஆனால் வெளியில் செல்லும் போது என்னை தவிர்த்து விடுவார்கள். சாப்பிடும் அறைக்கு சென்றாலும் என் அருகில் உட்கார மாட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிகிறோம். ஒன்றாக விளையாடுகிறோம், பயிற்சி எடுக்கிறோம், ஒரே தேசிய கீதத்தை படிக்கிறோம்

ஆனாலும் சக வீரர்களின் இத்தகைய பாகுபாட்டை கடந்து தான் சாதிக்க வேண்டி இருந்தது. இதனால் தான் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படும் போது சக வீரர்களுடன் பஸ்சில் செல்வதை தவிர்த்து நான் ஓடியே அங்கு செல்வேன். திரும்ப வரும்போதும் அப்படியேதான் ஓடி வருவேன்

அவர்களுக்கு நான் ஏன் அப்படிச் செய்கிறேன் என்பது புரியவில்லை. நானும் இதுபற்றி அவர்களிடம் பேசியதில்லை. நான் உண்மையில் என் தனிமையிலிருந்துதான் ஓடினேன், வீரர்களுக்கான பஸ்சில் நான் கடைசி இருக்கையில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் என்னைத் தனியாக விடுத்து முதல் இருக்கைகளில் அமர்வார்கள்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் புதிதாக 6 பேருக்கு கொவிட் 19 தொற்று

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள

தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறும் போது எல்லாம் மகிழ்ச்சி தாண்டவமாடும். தோற்கும் போது மட்டும் முதலில் என்னை தான் குறை சொல்வார்கள்.  

எனக்கு மட்டுமல்ல என் மகன் தாண்டோவுக்கு இதே நிறவெறி பாகுபாடு தான். 19 வயதுக்குட்பட்ட முகாமுக்கு செல்வதையே அவன் நிறுத்தி விட்டான், ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதிலிருந்து தப்பித்ததன் பின்னணி, அவனுக்கும் ஏற்பட்ட இழிவுதான் காரணம் என மகாயா நிடினி வேதனையுடன் கூறினார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க