கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

87

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சனை டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டுவிட்டர் பதிவொன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனின் டெஸ்ட் தலைமைத்துவப் பதவிக்கு ஆபத்து என்ற செய்தி உண்மையில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான கேன் வில்லியம்சன், மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் தலைவராக உள்ளார். இவரது தலைமையில் கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியிருந்தது.

அப்ரிடி ஒரு மோசமான தலைவர் – டேனிஷ் கனேரியா

இதற்கிடையில் கேன் வில்லியம்சனின் டெஸ்ட் அணியின் தலைவர் பதவிக்கு ஆபத்து என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது

இந்நிலையில் அந்த செய்தியில் உண்மையில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன் நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியா சென்று விளையாடியது. அப்போது நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது

அப்போது டெஸ்ட் அணிக்கான தலைவர் பதவியை டொம் லதமிடம் கொடுக்க பயிற்சியாளர் கேரி ஸ்டெட் விரும்புகிறார். அப்படி கொடுத்தால் வில்லியம்சனின் வேலைப்பளு குறையும் என ஆலோசனை வழங்கியதாக செய்தி வெளியாகியிருந்தது

இதனால் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக டொம் லதமை நியமிக்க நியூசிலாந்து கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளதாக, தி கிரவுட் கோஸ் வைல்ட் என்கிற விளையாட்டுச் செய்திகள் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர் ஜேம்ஸ் கெம்ஓனி டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்

இதில் பயிற்சியாளர் கேரி ஸ்டட், டொம் லதமை டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளார். இதனால் கேன் வில்லியம்சனிடமிருந்து டி20 பதவியைப் பறித்தால் அவருக்குப் பிரச்னை எதுவும் இருக்காது.  

கிரிக்கெட்டின் சாதனை பொக்கிஷம் குமார் சங்கக்கார

ஆனால் இவர்களுடைய திட்டம் அதுவாக இல்லை என்று கூறியிருந்தார். இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது

ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் சபை இத்தகவலை மறுத்துள்ளது. கேன் வில்லியம்சனின் தலைமைப் பதவிக்கு ஆபத்து என்கிற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் சபையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்ற நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் 0-5 என வைட்வொஷ் தோல்வியைத் தழுவியது. எனினும்அடுத்து நடைபெற்ற ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<