டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறிய இங்கிலாந்து

146

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் 146 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலிருந்த இங்கிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 80 புள்ளிகளை எடுத்தது.

இதனால் மொத்தம் 226 புள்ளிகள் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

முன்னதாக நடைபெற்ற ஆஷஸ் தொடரை 2-2 என சமப்படுத்திய இங்கிலாந்து அணி, கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 31 என கைப்பற்றியது.

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, இறுதியாக இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 20 என இழந்தது.

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை 2-0 என அல்லது 30 என கைப்பற்றினால் இங்கிலாந்து அணிக்கு புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்

Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

இதனிடையே, .சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் நான்கு டெஸ்ட் தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது

அவுஸ்திரேலிய அணி மூன்று தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 296 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொணடுள்ளது

நான்காவது இடத்தில் 180 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும், இதை தொடர்ந்து பாகிஸ்தான்(140 புள்ளிகள்), இலங்கை(80 புள்ளிகள்), மேற்கிந்திய தீவுகள்(40 புள்ளிகள்) மற்றும் தென்னாபிரிக்கா(24 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன.

இதில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியைத் தழுவிய பங்களாதேஷ்  அணி 9ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்றுக்குள் நுழைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

இதேவேளை, .சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என .சி.சி அறிவித்துள்ளதுடன், கொவிட் – 19 வைரஸ் அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட 6 தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் என்று .சி.சி. கூறியுள்ளது

.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…