Home Tamil இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கிய நியூசிலாந்தின் துடுப்பாட்டம்

இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கிய நியூசிலாந்தின் துடுப்பாட்டம்

666

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில், அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 382/5 ஓட்டங்களை குவித்துள்ளது. அத்துடன், நியூசிலாந்து அணி, இலங்கையை விட 138 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டநேர நிறைவில் 196/4 ஓட்டங்களை பெற்றிருந்த நியூசிலாந்து அணி, 48 ஓட்டங்கள் பின்னடைவில், இன்றைய ஆட்டத்தை தொடங்கவிருந்தது. எனினும், இன்றைய தினம் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியது.

நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து…

தொடர்ச்சியாக சீரற்ற காலநிலையால் போட்டி தாமதமாகிய நிலையில், மதியபோசன இடைவேளை எடுக்கப்பட்டு, பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி ஆரம்பமாகியது.

இதன்படி, இன்றைய தினம் களமிறங்கிய நியூசிலாந்து அணி, டொம் லேத்தம் மற்றும் பிஜே வெட்லிங் ஆகியோரது இணைப்பாட்டத்தை தொடர்ந்தது. இவர்கள் இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 143 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் அபாரமாக துடுப்பெடுத்தாடி, 154 ஓட்டங்களை பெற்ற போது, டொம் லேத்தம், டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்து களமிறங்கிய கொலின் டி கிரெண்டோம், நிதானமாக துடுப்பெடுத்தாடிய பிஜே வெட்லிங்குடன் இணைந்து, வேகமாக ஓட்டங்களை குவிக்க, தேநீர் இடைவேளையின் போது, நியூசிலாந்து அணி 295 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

Photos: Sri Lanka vs New Zealand | 2nd Test – Day 4

தேநீர் இடைவேளைக்கு பின்னர், நியூசிலாந்து அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. இதில், பிஜே வெட்லிங் ஏற்கனவே அரைச் சதம் கடந்திருக்க, கொலின் டி கிரெண்டோம் அதிரடியாக ஓட்டங்களை குவித்து அவரும் அரைச் சதம் கடந்தார். இதற்கிடையில் போட்டியில் மழை குறுக்கிட்ட போதும், மீண்டும் விரைவாக போட்டி ஆரம்பமானது.

எவ்வாறாயினும், பிஜே வெட்லிங் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகிய இருவரும் இன்றைய ஆட்டநேர இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய நிலையில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அத்துடன், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை நியூசிலாந்து அணி முந்தியுள்ளதுடன், 138 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆறாம் இலக்கத்தை நிரந்தரமாக கொடுத்தால் ஓட்டங்களைக் குவிப்பேன் – தனஞ்சய டி சில்வா

இலங்கை டெஸ்ட் அணிக்காக தொடர்ந்து….

நியூசிலாந்து அணி சார்பில் ஆட்டநேர இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பிஜே வெட்லிங் 81 ஓட்டங்களையும், கொலின் டி கிரெண்டோம் 83 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, டில்ருவான் பெரேரா 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் நாளை காலை கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result

Sri Lanka
244/10 (90.2) & 122/10 (70.2)
New Zealand
431/6 (115)
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c BJ Watling b Tim Southee 65 165 6 0 39.39
Lahiru Thirimanne c Kane Williamson b William Somerville 2 35 0 0 5.71
Kusal Mendis c BJ Watling b Colin de Grandhomme 32 70 4 0 45.71
Angelo Mathews c BJ Watling b Trent Boult 2 29 0 0 6.90
Kusal Perera lbw b Trent Boult 0 4 0 0 0.00
Dhananjaya de Silva b Trent Boult 109 148 16 2 73.65
Niroshan Dickwella c BJ Watling b Tim Southee 0 3 0 0 0.00
Dilruwan Perera lbw b Ajaz Patel 13 54 1 0 24.07
Suranga Lakmal c BJ Watling b Tim Southee 10 24 1 0 41.67
Lasith Embuldeniya lbw b Tim Southee 0 2 0 0 0.00
Lahiru Kumara not out 5 11 0 0 45.45
Extras 6 (b 1 , lb 2 , nb 3, w 0, pen 0)
Total 244/10 (90.2 Overs, RR: 2.7)
Fall of Wickets 1-29 (14.4) Lahiru Thirimanne, 2-79 (32.3) Kusal Mendis, 3-93 (41.1) Angelo Mathews, 4-93 (41.5) Kusal Perera, 5-130 (57.3) Dimuth Karunaratne, 6-130 (57.6) Niroshan Dickwella, 7-171 (74.5) Dilruwan Perera, 8-214 (83.5) Suranga Lakmal, 9-224 (85.1) Lasith Embuldeniya, 10-244 (90.2) Dhananjaya de Silva,
Bowling O M R W Econ
Trent Boult 22.2 6 75 3 3.38
Tim Southee 29 7 63 4 2.17
Colin de Grandhomme 17 3 35 1 2.06
William Somerville 6 3 20 1 3.33
Ajaz Patel 16 4 48 1 3.00
Batsmen R B 4s 6s SR
Jeet Raval c Dhananjaya de Silva b Dilruwan Perera 0 9 0 0 0.00
Tom Latham lbw b Dilruwan Perera 154 251 15 0 61.35
Kane Williamson c Kusal Mendis b Lahiru Kumara 20 28 2 0 71.43
Ross Taylor c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 23 43 3 0 53.49
Henry Nicholls c Dhananjaya de Silva b Dilruwan Perera 15 46 0 0 32.61
BJ Watling not out 105 226 4 0 46.46
Colin de Grandhomme c Lahiru Kumara b Lasith Embuldeniya 83 77 5 5 107.79
Tim Southee not out 24 10 2 2 240.00
Extras 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0)
Total 431/6 (115 Overs, RR: 3.75)
Fall of Wickets 1-1 (3.1) Jeet Raval, 2-34 (12.5) Kane Williamson, 3-84 (26.2) Ross Taylor, 4-126 (42.3) Henry Nicholls, 5-269 (85.3) Tom Latham, 6-382 (110.2) Colin de Grandhomme,
Bowling O M R W Econ
Dilruwan Perera 37 4 114 3 3.08
Dhananjaya de Silva 5 1 10 0 2.00
Suranga Lakmal 11 2 32 0 2.91
Lahiru Kumara 25 0 115 1 4.60
Lasith Embuldeniya 37 4 156 2 4.22


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne run out (Ajaz Patel) 0 5 0 0 0.00
Kusal Perera c BJ Watling b Trent Boult 0 3 0 0 0.00
Kusal Mendis b William Somerville 20 63 3 0 31.75
Angelo Mathews c Ross Taylor b Colin de Grandhomme 7 30 0 0 23.33
Dhananjaya de Silva c Tim Southee b Ajaz Patel 1 19 0 0 5.26
Niroshan Dickwella c Tom Latham b Ajaz Patel 51 161 4 0 31.68
Dimuth Karunaratne lbw b Tim Southee 21 70 2 0 30.00
Dilruwan Perera c Ross Taylor b Tim Southee 0 12 0 0 0.00
Suranga Lakmal c Tom Latham b William Somerville 14 45 2 1 31.11
Lasith Embuldeniya c Kane Williamson b Trent Boult 5 11 0 0 45.45
Lahiru Kumara not out 0 3 0 0 0.00
Extras 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0)
Total 122/10 (70.2 Overs, RR: 1.73)
Fall of Wickets 1-0 (0.5) Lahiru Thirimanne, 2-4 (2.2) Kusal Perera, 3-11 (11.3) Angelo Mathews, 4-22 (18.3) Dhananjaya de Silva, 5-32 (21.5) Kusal Mendis, 6-73 (43.5) Dimuth Karunaratne, 7-75 (47.4) Dilruwan Perera, 8-115 (65.3) Suranga Lakmal, 9-118 (69.3) Niroshan Dickwella, 10-122 (70.2) Lasith Embuldeniya,
Bowling O M R W Econ
Trent Boult 14.2 8 17 2 1.20
Tim Southee 12 6 15 2 1.25
Ajaz Patel 19 3 31 2 1.63
Colin de Grandhomme 4 1 8 1 2.00
William Somerville 21 6 49 2 2.33

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<